உழவன் இ-சந்தை மூலம் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் - தமிழக அரசு ஸ்மார்ட் ஏற்பாடு

உழவன் ஆப் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருளை பதிவுசெய்தால், வியாபாரிகள் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்கிக்கொள்வர்

உழவன் இ-சந்தை மூலம் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் - தமிழக அரசு ஸ்மார்ட் ஏற்பாடு
கோப்பு படம்
  • Share this:
தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள உழவன் செயலியில் இ-சந்தை என்ற கட்டணமில்லா சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதில், விவசாயிகள் தங்கள் விளைபொருளை பதிவுசெய்தால், வியாபாரிகள் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்கிக்கொள்வர். இந்த வசதியை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உழவன் செயலியை எப்படி பெறுவது?


உழவன் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.. கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Link: https://play.google.com/store/apps/details?id=agri.tnagri

பின்னர் , செயலியில் உங்கள் விவரங்களை பதிவு செய்யவேண்டும்.பதிவு முடிந்தவுடன் தோன்றும் திரையில், உழவன் இ-சந்தை என்பதை கிளிக் செய்தால், கீழ்காணுமாறும் தோன்றும்.
நீங்கள் விவசாயி என்றால், விளைப்பொருட்களை விற்பதற்கான தெரிவை தேர்வு செய்யலாம். வியாபாரி எனில் வாங்குவதற்கான தெரிவை தேர்ந்தெடுக்கலாம்.
என்னென்ன பொருட்கள் விற்பனைக்கு உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள வசதிகள் உள்ளன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்கள் விளைபொருட்களை விற்க முடியாமல் நிலத்திலேயே விடும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், தமிழக அரசின் இதுபோன்ற முயற்சி விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading