உலக அரங்கில் பிளாஸ்டிக் என்பது பூதாகரமான பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. அதன் பயன்பாட்டைக் குறைக்க எல்லா அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. மக்கும் பிளாஸ்டிக்கை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி உள்ளன.
PLA பயன்பாடு:
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த பொதுமக்களின் அக்கறை, சுற்றுசூழல் காரணங்களால் புதுப்பிக்கத்தக்க, நிலையான மாற்றுபொருளாக பிஎல்ஏ (பாலி லாக்டிக் அமிலம்) பரவலாகப் பயன்படுத்த வழிவகுத்தது. கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பாலிமர்கள் வைத்து பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். ஒரு முறை பயன்படுத்தும் தேநீர் கோப்பைகள், பைகள் மற்றும் பேக்கேஜிங் கவர்கள் எல்லாம் PLA பயன்படுத்தி முப்பரிமாண (3D) அச்சிடுதல் மூலம் உருவாக்கப்படுகிறது.
3 ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் முதலீடு!
பிஎல்ஏ சில சமயங்களில் மக்கும் தன்மையுடையது என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அது அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் கீழ் தொழிற்சாலைகளில் மட்டுமே மக்க வைக்கப்படுகிறது. குடியிருப்பு குப்பைக் குவியல், மண் அல்லது கடல் போன்ற இயற்கை சூழல்களில் இது எளிதில் சிதைவடையாது. மக்கும் சாத்தியமே குறைவு. பல ஆண்டுகளுக்கு அப்படியே மண்ணோடு கிடக்கும்.
சிதைவு விகிதத்தை அதிகரிக்க சக்கரை :
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெறும் புற ஊதா (UV) ஒளியைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்குகளை மக்கவைக்க ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர். சாதாரண பிளாஸ்டிக் உருவாக்கும் பாலிமர்களில் சர்க்கரை பொருட்களை சேர்ப்பது புற ஊதா கதிர்வீச்சின் போது பிளாஸ்டிக்கின் சிதைவை அதிகரிக்கிறது என்று பாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
புற ஊதா கதிர்வீச்சு என்பது 10 நானோமீட்டர்கள் (nm) முதல் 400 nm வரையிலான அலைநீளத்தைக் கொண்டுள்ளது. இது கண்ணுக்கு புலப்படும் ஒளியை விட சிறியது. ஆனால் X-கதிர்களை விட நீளமானது.
எப்படி செயல்படும் ?
பெரும்பாலான PLA பிளாஸ்டிக்குகள் நீண்ட பாலிமர் சங்கிலிகளால் ஆனவை, அவற்றை நீர் மற்றும் நொதியால் உடைக்க முடியாது.
சர்க்கரை சேர்க்கும் போது, புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி உடைக்கக்கூடிய பிணைப்புகளால் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் சங்கிலியாக மாறுகிறது. புற ஊதா கதிர்களில் வெளிப்படும் போது, இந்த சங்கிலி வலுவிழந்து சிறிய பாலிமர் சங்கிலிகளாக உடைக்கிறது. பின்னர் அவை இயற்கைச் சூழலில் பிளாஸ்டிக்கை மக்கும் தன்மையுடையதாக மாறும்.
PLA இல் 3% சர்க்கரை பாலிமர் அலகுகளை இணைத்தால், புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது ஆறு மணி நேரத்தில் 40% சிதைந்துவிடும் என்று கண்டுபிடித்தனர். இதன் மூலம் எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் பிளாஸ்டிக் சிதைந்து மண்ணோடு கலந்துவிடும்.
இந்தத் தொழில்நுட்பத்தை தற்போதுள்ள பிளாஸ்டிக் உற்பத்தி செயல்முறைகளுடன் இணக்கமாக மாற்றி சுற்று சூழலுக்கு ஏற்ற நெகிழி பொருட்களை உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Plastic Ban, Plastic pollution, Sugar, UK