Netflix-ன் முக்கிய முடிவு... இனி நீங்கள் இந்த முறையில் வீடியோக்களை பார்க்க முடியாது

Netflix-ன் முக்கிய முடிவு... இனி நீங்கள் இந்த முறையில் வீடியோக்களை பார்க்க முடியாது

நெட்ஃபிலிக்ஸ்

ஒடிடி தளமாக இருக்கும் நெட்பிளிக்ஸூக்கு கோடிக்கணக்கானோர் பார்வையாளர்களாக உள்ளனர்

  • Share this:
    மற்றொருவரின் அக்கவுண்ட் பாஸ்வேர்டை பயன்படுத்தி நெட்பிளிக்ஸ் (Netflix) பயன்படுத்துவதற்கு அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

    உலகின் முன்னணி ஓடிடி தளமாக இருக்கும் நெட்பிளிக்ஸூக்கு கோடிக்கணக்கானோர் பார்வையாளர்களாக உள்ளனர். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஏராளாமானோர் நெட்பிளிக்ஸ் தளத்தில் பொழுதுபோக்கிற்காக இணைந்துள்ளனர். ஆனால், பார்வையாளர்களில் பாதிக்கும் குறைவானர்கள் மட்டுமே சந்தாதாரர்களாக இருப்பது அந்த நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் பார்வையாளர்களில் பாதிக்கும் அதிகமானோர் வேறொருவரின் நெட்பிளிக்ஸ் சந்தாவை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது நெட்பிளிக்ஸ் வளர்ச்சியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதால், சந்தாதாரர்கள், தங்களின் பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிர்வதை தடுக்க அந்த நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சோதனை அடிப்படையில், நெட்பிளிக்ஸ் அக்கவுண்டை லாகின் செய்யும்போது வார்னிங் அறிவிப்பு ஒன்று கொடுக்கப்படுகிறது. அதில், சந்தாதாரராக இருக்கிறீர்களா? என கேட்பதுடன், ஒருவேளை சந்தாதாரராக இல்லையென்றால் அங்கீகரிக்கப்படாத பாஸ்வேர்ட் பகிர்வு தடுக்கப்படும் என கூறியுள்ளது.

    மேலும், நீங்கள் நெட்பிளிக்ஸ் சந்தாதாரராக இல்லையென்றால், தொடர்ந்து நெட்பிளிக்ஸை பார்க்க உங்களுக்கு சொந்த அக்கவுண்ட் தேவை என்றும் அந்த எச்சரிக்கை அறிவிப்பில் யூசர்களுக்கு அறிவுறுதப்படுகிறது. இருப்பினும், இந்த முறையானது சோதனையின் அடிப்படையில் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பிட்ட அக்கவுண்ட் யூசர்களில் மட்டுமே அந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய நெட்பிளிக்ஸ் செய்தித்தொடர்பாளர், நெட்பிளிக்ஸ் தளத்தை அங்கீகரிக்கப்பட்ட சந்தாதாரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில், புதிய முயற்சி எடுக்கப்படுள்ளதாக விளக்கினார்.

    வேறொருவரின் அக்கவுண்டுகளை பயன்படுத்தி நெட்பிளிக்ஸ் பார்ப்பதை தடுக்கும் நோக்கில், பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், அதுவும் சோதனை அடிப்படையில் மட்டுமே செய்யப்படுவதாவும் அவர் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை அறிவிப்பு திரையில் வந்தாலும், அதற்கு dealy ஆப்சனை தேர்தெடுத்து தாமதப்படுத்திவிட்டு, தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தை பார்க்கலாம் என்றும் நெட்பிளிக்ஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கமாக கூறினார். ஒவ்வொரு முறை நெட்பிளிக்ஸ் அக்கவுண்டை திறக்கும்போது இந்த அறிவிப்பு கட்டாயம் இடம்பெறும் எனக் கூறிய அவர், உங்கள் வீட்டிற்கு அப்பாற்பட்ட நபருடன் நெட்பிளிக்ஸ் அக்கவுண்டை பகிரக்கூடாது என்ற விதிமுறை உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

    யூசர் அக்கவுண்டை சரிபார்க்க தொலைபேசிக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது இமெயில் மூலம் வெரிபிக்கேஷன் கோட் அனுப்பப்படும் என்றும் நெட்பிளிக்ஸ் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில், நெட்பிளிக்ஸை பயன்படுத்துபவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மற்றொருவரின் சந்தாவை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டு, சோதனை முயற்சியையும் தொடங்கியுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் யூசர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .
    Published by:Vijay R
    First published: