இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான யூஸர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்து வருகிறது. நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆடியோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் உள்ளிட்ட பலவற்றை ஷேர் செய்யவும் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் வாட்ஸ்அப் புதிய அம்சம் ஒன்றில் செயல்பட்டு வருகிறது. தயார் செய்யப்பட்டு வரும் இந்த புதிய அம்சம் யூஸர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 2 ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் பயன்படுத்தும் திறனை விரைவில் வழங்க கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு டேப்லெட்ஸ் போன்ற கூடுதல் டிவைஸ்களுடன் நம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இணைக்க அனுமதிக்கும். இந்த அம்சம் Linked Devices feature என்று குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக தற்போது வாட்ஸ்அப் யூஸர்கள் டேப்லெட் மூலம் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் லாகின் செய்தால் அவர்களின் பிரைமரி ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து ஆட்டோமேட்டிக்காகவே லாக்அவுட் ஆகி விடுவார்கள்.
Read More : நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப்!
இந்நிலையில் ஒரே நேரத்தில் வேறு ஒரு ஆண்ட்ராய்டு டிவைசிலும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்த உதவும் புதிய அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப்-பின் அறிக்கைப்படி யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் போனின் பிரைமரி வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஆண்ட்ராய்டு டேப்லெட் போன்ற செகண்டரி டிவைஸ்களுடன் இணைக்க அனுமதிக்கும்.
எனவே செகண்டரி டிவைஸ்களில் பயன்படுத்த தனி வாட்ஸப் அக்கவுண்ட்ஸ்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. WhatsApp Web-ற்கு செய்வது போன்றே யூஸர்கள் தங்களின் செகண்டரி டிவைஸ்களில் காட்டப்படும் QR code அவர்களின் ஸ்மார்ட் ஃபோன் ஆப் மூலம் ஸ்கேன் செய்யது கொள்ள முடியும். ஸ்கேன் செய்து வெற்றிகரமாக செகண்டரி டிவைஸில் லாக்இன் செய் பிறகு, ஃபோன் ஆப்-ல் இருக்கும் அனைத்து சேட்களும் யூஸர்களின் செகண்டரி டிவைஸிலும் காட்டப்படும்.
இது கிட்டத்தட்ட WhatsApp Web வழங்கும் அனுபவத்துடன் ஒத்ததாகவே இருக்கும். இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா யூஸர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் பீட்டா திட்டத்தில் இல்லாதவர்கள் இந்த அம்சத்தை தற்போது பயன்படுத்த முடியாது. பீட்டா வெர்ஷன் டெஸ்டிங்கிற்காக ரிலீஸ் செய்யப்படும் என்பதால் பொதுவாக பிழைகள் நிறைந்ததாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology, WhatsApp, Whatsapp Update