Home /News /technology /

Windows 11 அப்டேட்: இதையெல்லாம் செய்தால் மட்டுமே விண்டோஸ் 11 வெர்ஷனை பயன்படுத்த முடியும்

Windows 11 அப்டேட்: இதையெல்லாம் செய்தால் மட்டுமே விண்டோஸ் 11 வெர்ஷனை பயன்படுத்த முடியும்

Windows 11 அப்டேட்

Windows 11 அப்டேட்

இந்த மாதிரி எல்லாம் அப்டேட் செய்யப்படுமா என்று பல யூசர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பார்ப்பை மீறும் அளவுக்கு விண்டோஸின் புதிய வெர்ஷன் காணப்படுகிறது.

கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் விண்டோஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான விண்டோஸ் பல்வேறு தொழில்நுட்பம் மேம்பாடுகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிய அம்சங்கள் மற்றும் கருவிகளுடன் விண்டோ 11 வெர்ஷன் வெளியாகியுள்ளது.

விண்டோஸ் லைவ் வெர்ஷன் ஏற்கனவே சில குறிப்பிட்ட மாடல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் இன்பில்ட்டாக வருகிறது. அதுமட்டுமின்றி விண்டோஸ் 11 வெர்ஷன் வெளியாவதற்கு முன்பே வாங்கப்பட்ட கணினி மற்றும் கம்ப்யூட்டர்களின், குறிப்பிட்ட பிராண்டுகலில் ‘ஆட்டோமேட்டிக் அப்டேட்’ என்று தானாகவே விண்டோஸ் 11 அப்டேட் ஆகிறது.

மேலும், இந்த மாதிரி எல்லாம் அப்டேட் செய்யப்படுமா என்று பல யூசர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பார்ப்பை மீறும் அளவுக்கு விண்டோஸின் புதிய வெர்ஷன் காணப்படுகிறது. அதில் குறிப்பாக, விண்டோஸ் 1 1 இருந்தால், நீங்கள் ஆண்ட்ராய்டு செயலிகளை உங்கள் கணினி அல்லது கம்ப்யூட்டரிலேயே பயன்படுத்தும் அளவுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு மாற்றங்கள் கொண்டு வந்தாலும் விண்டோஸ் 11 வெர்ஷனை முழுமையாக பயன்படுத்த ஒரு சில விரும்பத்தகாத மாற்றங்களை செய்துள்ளது.

விண்டோஸ் 11 ஐ உங்கள் சிஸ்டத்தில் பயன்படுத்த விரும்பினால் உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் கணக்கு கட்டாயமாக இருக்க வேண்டும். நீங்கள் மைக்ரோசாப்ட் கணக்கில் லாகின் செய்தால் மட்டுமே விண்டோ 11 பயன்படுத்த முடியும் என்ற புதிய அப்டேட்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது விண்டோஸ் 11 ப்ரோ யூசர்களுக்கும் பொருந்தும். எனவே உங்களிடம் மைக்ரோசாப்ட் கணக்கு இல்லாமல் அல்லது நீங்கள் லாகின் செய்யாமல் விண்டோஸ் 11 வெர்ஷனை பயன்படுத்தவே முடியாது.

இத்தனை ஆண்டுகளாக விண்டோஸில் லாகின் செய்யும் போது நேரடியாகவே லாகின்செய்யலாம். ஒரு சிலர் பாதுகாப்பு கருதி செக்யூரிட்டி பாஸ்வேர்டு அமைத்திருப்பார்கள். யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டு லாக் இன் செய்யலாம். ஆனால் லாகின் செய்வதற்கு மைக்ரோசாப்ட் கணக்கு இது வரை தேவைப்படவே இல்லை. இந்த விஷயத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மாற்றியுள்ளது.

அது மட்டுமின்றி புதிய கம்ப்யூட்டரை அல்லது லேப்டாப்பை வாங்கி செட்-அப் செய்யும் போதும் இன்டெர்நெட் கனெக்ஷன் தேவைப்படும். இன்டர்நெட் கனக்ஷன் இருந்தால்தான் மைக்ரோசாப்ட் கணக்கில் உங்களால் லாகின் செய்ய முடியும். இது விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் மற்றும் விண்டோ 11 ப்ரோ வெர்ஷன் என்ற இரண்டு வகைகளுக்குமே பொருந்தும்.

Also read... விரைவில் வருகிறது யூஸர்களின் உடல் செயல்பாடுகளை கண்காணிக்கும் Apple AirPods!

இதுவரை மைக்ரோசாஃப்ட் கணக்கு இல்லாமல் லாகின் செய்தோம், ஆனால் இப்பொழுது மைக்ரோசாப்ட் கணக்குடன் விண்டோஸ் 11 வெர்ஷனில் லாகின் செய்ய வேண்டும் இது ஒரு சிறிய மாற்றம் தானே, இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் யூசர்களின் டேட்டாவை டிராக் செய்வதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இது கூகுள் நிறுவனத்தின் மீதும் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

விண்டோஸ் 11 மைக்ரோசாப்ட் நிறுவனம் யூசர்களின் தரவுகளை டிராக் செய்வதற்கு இதை ஒரு முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே கூகுள் க்ரோம்புக்கை உங்களிடம் ஜிமெயில் இருந்தால் தான் பயன்படுத்த முடியும். அதேபோல ஆப்பிள் சாதனத்தில் ஆப்பிள் ஐடி இருந்தால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே யூசர்களின் டேட்டாவை டிராக் செய்யும். அதே போல, மிகப்பெரிய எண்ணிக்கையிலான யூசர்களைக் கொண்ட மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 11 வழியே தனது யூசர்களை டிராக் செய்யத் தொடங்குகிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Microsoft

அடுத்த செய்தி