முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஃபிளாஷ் லைட்டை நோட்டிஃபிகேஷன் அலர்ட்டாக பயன்படுத்துவது எப்படி..?

ஃபிளாஷ் லைட்டை நோட்டிஃபிகேஷன் அலர்ட்டாக பயன்படுத்துவது எப்படி..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நமது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் உள்ள கேமரா ஃபிளாஷ் லைட்டை நோட்டிபிகேஷன் அலர்ட்டாக பயன்படுத்த முடியும் ன்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் முடியும்.. எப்படி அதை பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையா படியுங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

செல்போன் இருந்தாலும் தொல்லை… இல்லாவிட்டாலும் தொல்லை. பத்து பேர் சேர்ந்து ஓர் இடத்தில் அமர்ந்திருந்தால் நொடிக்கொரு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி என சத்தம் யாருடைய செல்போனில் இருந்தாவது வந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும்.

இதே போல், ஏற்கனவே மிகவும் சத்தமான இடங்களிலோ, அல்லது கோவில், மருத்துவமனை ஏன் சில நேரங்களில் வகுப்பறை என அமைதியான இடங்களில் இருக்கும் போது நமக்கு வரும் தொலைபேசி அழைப்பிற்கான ரிங் டோன் மற்றவர்களை எரிச்சலை உண்டாக்கும். சைலண்ட் மோடில் வைத்துவிட்டால் பெரும்பாலான அழைப்புகளை நாம் தவற விட்டுவிடுவோம்.

Read More : பத்தாயிரம் ரூபாய்க்கு புரோ போனா..? அசத்தும் டெக்னோ நிறுவனம்!

சைலண்ட்டாகவும் இருக்க வேண்டும், ஆனால் அழைப்புகளை தவறவும் விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஃபிளாஷ்லைட் அலர்ட். அதோடு, காது கோளாதவர்கள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கும் இந்த அலர்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இருக்கும் கேமரா ஃபிளாஷ் லைட்டைத் தான் நாம் நோட்டிஃபிகேஷன் அலர்ட்டாக மாற்றப் போகிறோம்.. எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

முதலில் ஆண்ட்ராய்டு போனில் இந்த அம்சத்தை செட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள செட்டிங்சை திறக்கவும். பிறகு, ஸ்கிரோல் டவுன் செய்து, அசசிபிலிட்டி செட்டிங்ஸ்( Accessibility settings) என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு, அதன் கீழ் காணப்படும் அட்வான்ஸ் செட்டிங்ஸ்(Advanced settings) என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். மீண்டும் ஸ்க்ரோல் செய்து, பிளாஷ் நோட்டிபிகேஷன்(Flash Notification) என்பதை கிளிக் செய்யவும். இதையடுத்து, அதில் காணப்படும் கேமரா பிளாஷ் நோட்டிபிகேஷன் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். -
உங்கள் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவையும் நோட்டிஃபிகேஷன் அலர்ட்டாக செட் செய்து கொள்ளலாம். இதற்கு ஸ்கிரீன் ஃப்ளாஷ் நோட்டிபிகேஷன் என்ற அம்சத்தை ஆக்டிவேட் செய்யவும்.
இப்போது ஐ போனில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். உங்கள் ஐ போனில் இருக்கும் செட்டிங் ஓபன் செய்து பிறகு அசசபிலிட்டி செட்டிங்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்பொழுது கீழே ஆடியோ மற்றும் விஷுவல் ஆப்ஷன் என்பதை கிளிக் செய்யவும். - பிறகு அதில் ஸ்க்ரோல் டவுன் செய்து, டர்ன் ஆன் எல்இடி பிளாஷ் ஃபார் அலர்ட் என்ற அம்சத்தை ஆன் செய்யவும்.
இப்போது உ ங்கள் ஃபிளாஷ் லைட்டும், ஸ்கிரீன் டிஸ்பிளேவும் நோட்டிஃபிகேஷன் அலர்ட்டாக செயல்படும். இது உங்களுக்கு தேவைப்படாவிட்டாலும், மற்றவர்களுக்கு தேவைப்படும் போது செட் செய்து கொடுத்து அசத்துங்கள். செய்தியாளர் ரொசாரியோ ராய் 
First published:

Tags: Smartphone, Technology