Home /News /technology /

உலகளவில் டேட்டிங் ஆப்ஸ்களின் பயன்பாடு ஜனவரி 2022-ல் 20% அதிகரிப்பு.!

உலகளவில் டேட்டிங் ஆப்ஸ்களின் பயன்பாடு ஜனவரி 2022-ல் 20% அதிகரிப்பு.!

டேட்டிங் ஆப்ஸ்

டேட்டிங் ஆப்ஸ்

Dating App : கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள டாப் டேட்டிங் ஆப்ஸ்களில் டிண்டர் தனது பெரும்பான்மை மார்க்கெட் ஷேரை தொடர்ந்து பராமரித்து வருவதை கண்டறிந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடந்த 2 ஆண்டுகளில் சமூகமயமாக்கல் மாறியிருந்தாலும் கோவிட்-19 தொற்றுக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும் போது உலகளவில் டேட்டிங் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதை Sensor Tower Usage Intelligence-ன் டேட்டாக்கள் வெளிப்படுத்தி இருக்கிறது. சென்சார் டவரின் கூற்றுப்படி, கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் சிறந்த டேட்டிங் ஆப்களில் ஒன்றான டிண்டர் (Tinder) அதன் பெரும்பான்மை மார்க்கெட் ஷேரை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

அதே போல டிண்டர் (Tinder), பம்பிள் (Bumble) மற்றும் ஹைன்ஞ் (Hinge) ஆகியவற்றின் உலகளாவிய பயன்பாடு 2019-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டான 2022 ஜனவரியில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்சார் டவரின் டேட்டாக்கள் கூறுகின்றன. சென்சார் டவரின் டேட்டிங் ஆப்ஸ் 2021 அறிக்கை, நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள டாப் டேட்டிங் ஆப்ஸ்களில் டிண்டர் தனது பெரும்பான்மை மார்க்கெட் ஷேரை தொடர்ந்து பராமரித்து வருவதை கண்டறிந்துள்ளது.

இதையும் படியுங்கள் : கொரோனா 3வது அலை : டெல்லியில் முதன்முறையாக ஒருநாள் பாதிப்பு 1000-க்கும் குறைவாக பதிவு

டிண்டர் ஆப்-ஸின் உலகளாவிய பயன்பாடும் இதே போக்கைப் பிரதிபலிக்கிறது. ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை, பம்பிள் மற்றும் ஹைன்ஞ் உள்ளிட்ட டேட்டிங் ஆப்ஸ்களில் மாதாந்திர செயலில் உள்ள யூஸர்கள் (monthly active users) டிண்டரின் ஒரு பகுதியை அடைந்துள்ளனர். இருப்பினும் அவர்களின் யூஸர் பேசஸ் அந்த நேரத்தில் வளர்ந்துள்ளன. கடந்த ஜனவரி 2019-ஆம் ஆண்டில் Bumble-ன் மில்லியன் கணக்கான மாதாந்திர செயலில் உள்ள யூஸர்கள் அதாவது MAU-க்கள் (million monthly active users) டிண்டரின் 13 சதவீதத்தை எட்டியது, அதே சமயம் Hinge 3 சதவீத MAU-வை கண்டது. தற்போது மூன்று ஆண்டுகளில் Bumble-ன் யூசேஜ் 13 புள்ளிகள் உயர்ந்து ஜனவரி 2022-ல் Tinder-ன் கால்வாசி பகுதியை எட்டியது. மேலும் Hinge-ன் யூசேஜ் 9 புள்ளிகள் அதிகரித்து 12 சதவீதமாக இருந்தது.

இதையும் படியுங்கள் : தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான உரிமை எந்த வகையிலும் மறுக்கப்படாது... தமிழிசை உறுதி..

இந்த டேட்டாக்களின் படி பார்க்கும் போது Bumble மற்றும் Hinge ஆகிய டேட்டிங் ஆப்ஸ்கள் கடந்த மூன்று வருடங்களாக தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. ஜனவரி 2022-ல் Hinge அதன் MAU-க்கள் ஜனவரி 2019-ல் இருந்ததை விட 4 மடங்குக்கு மேல் எட்டி வளர்ச்சியை கண்டது, அதே நேரத்தில் Bumble அதன் MAU-க்களில் ஒட்டு மொத்தமாக 96 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. மறுபுறம் இதே காலகட்டத்தில் Tinder-ன் யூசேஜ் ஒப்பீட்டளவில் நிலையானதாக காணப்படுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் அதன் ஆடியன்ஸ்கள் ஏற்கனவே ஒப்பீட்டளவில் அதிகம் மற்றும் டேட்டிங் ஆப்ஸ்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Dating apps, Online dating app

அடுத்த செய்தி