காலநிலை போராட்டத்துக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டம் - கூகுள், அமேசான் ஊழியர்கள் பங்கெடுப்பு!

அமேசான் ஊழியர்கள் குறிப்பாக தங்களது நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.

காலநிலை போராட்டத்துக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டம் - கூகுள், அமேசான் ஊழியர்கள் பங்கெடுப்பு!
மாதிரிப்படம் (Image: AP)
  • News18
  • Last Updated: September 21, 2019, 1:46 PM IST
  • Share this:
காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலக முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவரும் வேளையில் டெக் நிறுவன ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும் என கூகுள், அமேசான் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிகாவின் சான்ஃபிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் நகரில் இந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் உள்ளனர். சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றுச்சூழலைக் காக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த கூகுள், “காற்று மற்றும் சூரிய ஒளி ஆற்றலை கூகுள் பயன்படுத்துவதை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது” எனக் கூறியுள்ளது. அமேசான், “வருகிற 2040-ம் ஆண்டுக்குள் கார்பன்- நியூட்ரல் நிறுவனமாக மாற அமேசான் டெலிவரிக்காக சுமார் 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவோம். 2030-ம் ஆண்டுக்குள் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே உபயோகிப்போம்” என்றும் அறிவித்துள்ளது.


அமேசான் ஊழியர்கள் குறிப்பாக தங்களது நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து இந்தக் கோரிக்கை நிறுவனத் தலைமையிடம் பேச்சுவார்த்தையிலேதான் உள்ளது.

மேலும் பார்க்க: பாரீஸில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தத் தடை- வரவேற்பு பெரும் ரசாயன எதிர்ப்பு இயக்கம்

விக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading