ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விண்வெளி குப்பைகளை 5 ஆண்டுக்குள் நீக்க அமெரிக்காவின் புதிய திட்டம்!

விண்வெளி குப்பைகளை 5 ஆண்டுக்குள் நீக்க அமெரிக்காவின் புதிய திட்டம்!

விண்வெளி குப்பைகள்

விண்வெளி குப்பைகள்

இந்த குப்பைகள் இப்படியே இருந்தால் விபத்துகள் ஏற்பட்டு மற்ற இயங்கும் செயற்கைகோள்கள் செயலிழக்கும் அபாயம் உள்ள பகுதி உள்ள பகுதியாக மாறிவிடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வியாழன் அன்று, அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்கல குப்பைகள் அல்லது விண்வெளி குப்பைகள் என அழைக்கப்படும் சுற்றுப்பாதை குப்பைகளின் அபாயத்தை நிவர்த்தி செய்வதற்கான புதிய விதிகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் செயலில் உள்ள விண்கலங்களின் வழியில் இருக்கும் செயல்படாத செயற்கைக்கோள்களை அகற்றுவதற்கான நேரத்தைக் குறைப்பதும் இதில் அடங்கும்.

செயல்படாத செயற்கைகோள்களை அகற்றுவதன் மூலம் சுற்றுவட்ட பாதையில் இயங்கி வரும் செயற்கைக்கோள்கள் மோதி பாதிக்கப்படுவது குறையும். விபத்துகள் தடுக்கப்படும், செயல் திறன் மேம்படும் என்று FCC தலைவர் ஜெசிகா ரோசன்வொர்செல் கூறினார்.

மேலும் அமெரிக்க ஏஜென்சி அமெரிக்க ஆபரேட்டர்களுக்கு முன்னர் வழங்கியிருந்த  குறைந்த புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை அகற்றுவதற்கான குறுகிய காலக்கெடுவை 25 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்றம் செய்துள்ளது.

காந்தி நினைவாக எழுப்பப்பட்ட 10 முக்கிய அருங்காட்சியகங்கள்..!

1957 முதல் சுமார் 10,000 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இப்போது செயல்படவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. "செயலிழந்த செயற்கைக்கோள்கள், நிராகரிக்கப்பட்ட ராக்கெட் கோர்கள் மற்றும் பிற குப்பைகள் இப்போது விண்வெளி சூழலை நிரப்புகின்றன என்று FCC கூறியது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 4,800 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியானவை.

செயல் இழந்து சுற்றிக்கொண்டிருக்கும் இந்த விண்வெளி குப்பைகள் 'லோயர் எர்த் ஆர்பிட்' எனப்படும் கீழ் வளிமண்டலத்தில் ஒரு போர்வை போல மாறி வருகிறது. இதை விலக்கினால்தான் அடுத்தடுத்த ஏவுகணைகளை விண்ணில் செலுத்த முடியும்.

இந்த குப்பைகள் இப்படியே இருந்தால் விபத்துகள் ஏற்பட்டு மற்ற இயங்கும் செயற்கைகோள்கள் செயலிழக்கும் அபாயம் உள்ள பகுதி உள்ள பகுதியாக மாறிவிடும்.  ஏவுகணைகளை அனுப்ப எந்த முதலீட்டாளரும் முன்வர மாட்டார்கள். பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, இதை விரைவில் நீக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

First published:

Tags: USA