ஜியோவில் குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாய் முதலீடு: 3 மாதத்தில் 13-வது முதலீடு

ஜியோவில் குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாய் முதலீடு: 3 மாதத்தில் 13-வது முதலீடு
மாதிரிப் படம்
  • Share this:
ஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அதன்மூலம் 0.15 சதவீதப் பங்குகளை வாங்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில், பேஸ்புக், சில்வர் லேக்,. விஸ்டா இக்யூட்டி, ஜெனரல் அட்லாண்டிக், முபடாலா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்தன.

இந்த வரிசையில் 13-வது நிறுவனமாக அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் 0.15 சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்ததன் மூலம் 9.99 சதவீதப் பங்குகளை வாங்கியது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி இதுவரை 25.20 விழுக்காடு பங்குகளை விற்றதன் மூலம் ஒரு லட்சத்து 18,318 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்நாப்ட்ரேகன் ராம் அதிகமான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தானியங்கி தொழில்நுட்பத்தில் குவால்காம் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading