ஜியோவில் குவால்காம் முதலீடு - அதிநவீன 5 ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்பை மேற்கொள்ள முடியும்

பேஸ்புக், சில்வர் லேக் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் ஜியோ தளங்களில் சுமார் 10 விழுக்காடு அளவு பங்குகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோவில் குவால்காம் முதலீடு - அதிநவீன 5 ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்பை மேற்கொள்ள முடியும்
மாதிரி படம்
  • Share this:
வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னோடி நிறுவனமான குவால்காம் வென்சர்ஸ் நிறுவனம், ஜியோ தளங்களில் 730 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த அளவானது ஜியோவின் பங்குகளில் பூஜ்ஜியம் புள்ளி 15 விழுக்காடாகும். இந்த முதலீட்டின் மூலம் அதிநவீன 5 ஜி தொழிற்நுட்பத்துக்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.

இதுவரையிலும் ஜியோவுக்கு 38 கோடியே 80 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். குவால்காம் வென்சர்ஸ் நிறுவனம் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்காக குவால்காம் நிறுவன முதலீடு உதவும் என்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


Also read... சென்னையில் பாதிப்பை விட அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை

இதுவரை பேஸ்புக், சில்வர் லேக் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் ஜியோ தளங்களில் சுமார் 10 விழுக்காடு அளவு பங்குகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading