Home /News /technology /

இனி Uber ஆப்பில் இதுவும் செய்யலாம்..

இனி Uber ஆப்பில் இதுவும் செய்யலாம்..

காட்சி படம்

காட்சி படம்

Uber | பயண சேவையை ஊபர் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தர்ட் பார்டி புக்கிங் ஏஜென்சீஸ் உடன் இணைந்து டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ஊபர் (Uber) ஆப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, நெடுந்தொலைவு பயணங்களை மேற்கொள்வதற்கான விமானம், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதிகள் மற்றும் ஹோட்டல்களில் ரூம் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஆகியவை விரைவில் கிடைக்க இருக்கின்றன. பயணங்களுக்கான ‘சூப்பர் ஆப்’பாக ஊபர் இருக்க வேண்டும் என்ற அந்நிறுவனத்தின் இலக்குகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது, சோதனை அடிப்படையில் பிரிட்டனில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. ஊபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பார்ட்னர் நிறுவனங்களுடன் பயண அனுபவங்களை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது. பிரிட்டனுக்கான ஊபர் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜேமி ஹேவுட் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊபர் ஆப்-பில் டாக்ஸி, பைக், படகு சேவைகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகிய பயணங்களுக்கு புக்கிங் செய்யும் வசதியை பல ஆண்டுகளாக நீங்கள் பெற்று வருகிறீர்கள். தற்போது, அந்தப் பட்டியலில் ரயில்களும் இணைகின்றன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

also read : அமேசான், கூகுளுக்கு போட்டியாக டாடாவின் புதிய Tata Neu ஆல்-இன்-ஒன் ஆப்!

பயண சேவையை ஊபர் வழங்குவதோடு மட்டுமல்லாமல், Third Party புக்கிங் ஏஜென்சீஸ் உடன் இணைந்து டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. டிக்கெட் முன்பதிவு செய்யும் நடவடிக்கையில் எந்தெந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம் என்பதை ஊபர் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. அதே சமயம், Booking.com மற்றும் EXPedia Inc போன்ற நிறுவனங்களுடன் ஊபர் இணைந்து செயல்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக்கெட் முன்பதிவுகளை செய்யும்போது, அதற்கான சேவைக் கட்டணத்தை ஊபர் பெற்றுக் கொள்ளும்.

also read : இந்தியாவின் எதிர்கால டிஜிட்டல் உலகம் இதை சார்ந்து தான் உள்ளது!

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக ஊபர் நிறுவனத்தின் பிசினஸ் மாடல் முழுவதுமாக மாறியிருக்கிறது. ஃபுட் டெலிவரி சேவையில் கடுமையான இழப்புகளை அந்த நிறுவனம் சந்தித்து வந்தது. அதன் எதிரொலியாக, ஊபர் டாக்ஸி பிரிவிலும் பின்னடைவும் ஏற்பட்டது. இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு சேவை பிரிவில் அடியெடுத்து வைப்பதன் மூலமாக ஊபர் நிறுவனத்தின் மொத்த வணிகத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கோடைகாலம் முதல் புக்கிங் ஓப்பன்:

ரயில் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவை இந்த கோடை காலத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. விமானம் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்யும் சேவையானது இந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக, லண்டனில் ஊபர் சேவைகளை அடுத்த 30 மாதங்களுக்கு இயக்குவதற்கான உரிமத்தை அந்நிறுவனம் அண்மையில் பெற்றது. போக்குவரத்து சேவை துறையில் மாபெரும் மார்க்கெட் கொண்டுள்ள பிரிட்டனில் ஊபர் நிறுவனத்தை நிலைநிறுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Uber

அடுத்த செய்தி