Home /News /technology /

Google Chrome அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை செய்யுங்கள்

Google Chrome அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை செய்யுங்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

Google Chrome | ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க Windows, Mac மற்றும் Linux பதிப்புகளில் உள்ள Chrome யூசர்கள் தங்களது பிரவுசரை புதுப்பித்துக்கொண்டு முதலில் அப்டேட் செய்ய வேண்டும். புதிய Chrome பதிப்பு Mac மற்றும் Linux க்கு 104.0.5112.101 மற்றும் Windows க்கு 104.0.5112.102/101 என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்றைக்கு இணைய பயன்பாடுகளின் ஆதிக்கம் மக்களிடம் அதிகரித்துவிட்டது. ஆம் நமக்கும் எதுவும் தெரியவில்லை என்றால் உடனே நம் கைகள் செல்வது கூகுளைத் தேடி தான். இப்படி உலகம் முழுவதும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் அதே சமயம் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் ஒருபுறம் அதிகரிக்கிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும் இன்டர்நெட் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான சம்பவங்களினால் நாம் பாதிப்பை சந்திக்க நேரிடும். இது தொடர்பாக பல புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், Remote attacker களை கணினியில் arbitrary code ஐ இயக்குவதற்கு அனுமதிக்கும் என CRET IN கூறியுள்ளது.

மேலும் 81.0.4044.138-1 க்கு முந்தைய அனைத்து Google chrome பாதிப்புகளையும் பாதிக்கிறது. எனவே கூகுள் குரோம் யூசர்கள் தங்களது கூகுள் குரோம்மை அப்டேட் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் Windows, Mac மற்றும் Linux பதிப்புகளில் உள்ள Chrome பயனர்கள் தங்களது பிரவுசரை புதிய Chrome பதிப்பு Mac மற்றும் Linux க்கு 104.0.5112.101 மற்றும் Windows க்கு 104.0.5112.102/101 என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே நீங்கள் அப்டேட் செய்திருந்தால் பரவாயில்லை.



இல்லாவிடில் தேவையற்ற ஹேக்கர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். தற்போது கூகுள் குரோமில் 11 பாதுகாப்பு குறைபாடு அம்சங்கள் காணப்படுவதால், மீண்டும் ஒருமுறை அப்பேட் செய்யும் படி தங்களது யூசர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் நீங்கள் உங்களது கூகுள் குரோமை அப்பேட் செய்யவில்லையா? இல்லை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என தெரியவில்லையா? இதோ உங்களுக்கான தகவல்கள் இங்கே….

Also Read : டிஜிட்டல் தடயங்களை ஹேக்கர்களிடம் சிக்காமல் பாதுகாக்க உதவும் 5 யோசனைகள்.! 

உங்கள் கம்யூட்டரில் கூகுள் குரோம் அப்பேட் செய்வது எப்படி.?

நீங்கள் உங்களது கம்யூட்டரில் கூகுள் குரோமை அப்டேட் செய்திருந்தாலும், இல்லை செய்யாமல் இருந்தாலும் பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

முதலில், யூசர்கள் தங்களது கூகுள் குரோம் பிரவுசர் (google chrome browser) செல்ல வேண்டும்.

பின்னர் உங்களது வலதுப்புறத்தில் உள்ள 3 புள்ளிகளைக் கிளிக் செய்த பின்னர் Help என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.



தொடர்ந்து about google chrome சென்று புது அப்டேட் தேடல் ( new update search) என்பதை கிளிக் செய்தால் அப்டேட் முடிந்து உங்களது திரைக்கு relaunch என்ற ஆப்ஷன் தெரியவரும். இந்த ஆப்ஷனைக் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும் சில நிமிடங்களில் Version 105.0.5195.102 (Official Build) (64-bit) என்ற புதிய அப்டேட் வெர்சன் இன்ஸ்டால் ஆகிவிடும். இதைத் தொடர்ந்து வழக்கம் போல இனி நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரை ஓபன் செய்து எவ்வித அச்சமின்றி உபயோகிக்கலாம்.

எனவே இதுவரை google chrome பிரவுசரை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வதற்கு மறந்துவிடாதீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Google, Google Chrome, Hacking

அடுத்த செய்தி