Home /News /technology /

ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25000 வரை தள்ளுபடி உள்ளது! எங்கு தெரியுமா?

ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25000 வரை தள்ளுபடி உள்ளது! எங்கு தெரியுமா?

iphone 12 pro

iphone 12 pro

iphone 12 Pro | இதற்கு முன்பு ரிலீசான பல வகையான ஐபோன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு பெரிய அளவில் தள்ளுபடி தரப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வாரம் ஒரு இனிப்பான செய்தி வந்து விடுகிறது. இதில் சாதாரண ஸ்மார்ட்போன் முதல் ஐபோன் போன்ற சிறந்த ஸ்மார்ட்போன் ரிலீஸ் வரை இருக்கலாம். அவ்வப்போது தலைசிறந்த பிராண்ட்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் புது அப்டேட், விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற இனிப்பான செய்திகளை அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி கிடைத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஐபோன் SE 3 மாடல் விரைவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் இணைய தளங்களில் அறிமுகம் ஆகவுள்ளது தான். இதனால் இதற்கு முன்பு ரிலீசான பல வகையான ஐபோன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு பெரிய அளவில் தள்ளுபடி தரப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் உங்களின் பழைய ஆப்பிள் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்து கொண்டு 15,000 ரூபாய் வரை தள்ளுபடி பெற்று, ரூ.106,000-இல் இந்த ஸ்மார்ட்போனை பெற முடியும். அதே போன்று அமேசான் தளத்திலும் சிறந்த தள்ளுபடி பல உள்ளன. அதில் ஒன்று, ஆப்பிள் ஸ்மார்ட்போனை 19% வரை தள்ளுபடியில் பெறுவது தான். மற்றும் பழைய மொபைலை எக்ஸ்சேன்ஜ் செய்து ரூ.15000 வரை தள்ளுபடியையும் பெறலாம். மேலும் இதே போன்ற பல தள்ளுபடிகள் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் தளத்தில் தரப்பட்டுள்ளது.



ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ 265 GB வேரியண்ட் வகை ஸ்மார்ட்போனுக்கும் சிறந்த டீல்கள் உள்ளது. இந்த ஐபோன் 12 ப்ரோ மொபைலுக்கு 25000 ரூபாய் வரை தள்ளுபடி பெறுவதுடன் கூடுதலாக 15,000 ரூபாயும் தள்ளுபடி கிடைக்கிறது. ஆக மொத்தமாக 40,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இப்படியொரு அதிரடி தள்ளுபடியை ஐபோன் மொபைல்களுக்கு இதுவரை அறிவித்தது இல்லை. எனவே தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Also Read : ஐபோன் எஸ்இ 3 மாடலின் அறிமுக தேதி வெளியானது; சிறப்பம்சங்கள் என்னென்ன?

பிளிப்கார்ட் ஆன்லைன் தளத்திலும் இதே போன்ற தள்ளுபடியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ ஹோம் மொபைல்களை ரூ.10600-க்கு தள்ளுபடி விலையில் பெறலாம். குறிப்பாக நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருந்தால், 5% கேஷ்பேக் கிடைக்கும். இத்துடன் ரூ.100 கேஷ்பேக்பை ZebPay மூலம் பெறலாம். கூடுதலாக 25% வரை PharmEasy தளத்தில் தள்ளுபடிக்கான வவுச்சரையும் பெற முடியும்.

Also Read : Data Privacyஐ பாதுகாக்க இவற்றில் கவனம் செலுத்தினாலே போதும்..!

இந்த தள்ளுபடியில் உங்களுக்கு போதவில்லை என்றால், மற்றுமொரு தள்ளுபடியும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் லாகின் செய்து 'Pay Later' என்பதை கிளிக் செய்து கூடுதலாக ரூ.100 பரிசு கூப்பனையும் பெற முடியும். இவை அனைத்தையும் எளிதாக பெறுவதற்கு பிளிப்கார்ட் தளத்தை உடனே அணுகுங்கள். நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்ட்டமான வாய்ப்பாகும்.
Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, IPhone, Technology

அடுத்த செய்தி