ஐந்து ரியர் கேமிராக்கள் உடன் ‘மாஸ்’ காட்டும் நோக்கியா 9!

நோக்கியா 9 வெளியாகும் அதிகாரப்பூர்வ நாள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

Web Desk | news18
Updated: January 1, 2019, 2:39 PM IST
ஐந்து ரியர் கேமிராக்கள் உடன் ‘மாஸ்’ காட்டும் நோக்கியா 9!
nokia 9 pureview (Twitter- Evan Blass)
Web Desk | news18
Updated: January 1, 2019, 2:39 PM IST
ஐந்து ரியர் கேமிராக்கள் உடன் விரைவில் நோக்கியா ஒரு புது ஸ்மார்ட்ஃபோனை வெளியிடும் எனப் பல காலமாகப் பரவி வந்த செய்திகளை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

நோக்கிய 9 ஸ்மார்ட்ஃபோனின் அதிகாரப்பூர்வ வெளியீடு நடக்கும் போது வெளியிட தயார் செய்யப்பட்ட ஒரு அறிமுக வீடியோ தற்போது லீக் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் பல தொழில்நுட்பங்களுடன் சந்தையில் இறங்கத் தயாராகி உள்ள நோக்கிய 9 Pureview-வின் தோற்றம் தெரிகிறது.

edge-to-edge பேனல், ஐந்து ரியர் கேமிராக்கள், மிகப்பெரிய செல்ஃபி கேமிரா என அசத்துகிறது நோக்கியா 9. MySmartPrice மூலம் இந்த ஒரு நிமிட வீடியோ அறிமுகம் வெளியாகி உள்ளது. நோக்கியா 8 Sirocco மாடலை அடிப்படையாகக் கொண்டே நோக்கியா 9 மொபைலும் இருக்கும் எனத் தெரிகிறது. வட்ட வடிவில் பின் பக்க பேனலில் ஐந்து கேமிராக்கள் அமைந்துள்ளன. இந்த கேமிராக்கள் குறைவான வெளிச்சத்திலும் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. மற்ற ஸ்மார்ட்ஃபோன்களை விடவும் 10 மடங்கு தரமான புகைப்படங்களை எடுக்க நோக்கியா 9 உதவும்.


ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்ஃபோன் ரகமாக உள்ள நோக்கியா 9-ல் கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் இணைக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்நல் ஸ்டோரேஸ் கொண்டுள்ளது. இந்த மொபைல் 2018-ல் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக நோக்கியா 9 வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக HMD Global உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: திருவாரூர் இடைத்தேர்தல்: ஜன.4-ம் தேதி திமுக வேட்பாளர் நேர்காணல்
First published: January 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...