ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அன்லிமிடெட் இன்டர்நெட், ஓடிடி சந்தாக்கள் இலவசம்... Airtel வழங்கும் சூப்பர் ஆஃபர்

அன்லிமிடெட் இன்டர்நெட், ஓடிடி சந்தாக்கள் இலவசம்... Airtel வழங்கும் சூப்பர் ஆஃபர்

ஏர்டெல்

ஏர்டெல்

Airtel Offer | அன்லிமிடெட் இன்டர்நெட், ஓடிடி சந்தாக்கள் இலவசத்துடன் ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ள சூப்பர் ஆஃபர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  அன்லிமிடெட் ஹோம் பிராட்பேண்ட் இன்டர்நெட் கனெக்ஷன், ஓடிடி சந்தாக்கள், டிவி சேனல்கள் மற்றும் ஏர்டெல் பிளாக் ப்ரையாரிட்டி கேர் (Airtel Black priority care) ஆகியவற்றை தொகுக்கும் புதிய “ஆல் இன் ஒன்” பிராட்பேண்ட் திட்டங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரூ.699 முதல் தொடங்கி ரூ.1,599 வரை செல்கின்றன.

  ரூ.699 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்: ரூ.699 திட்டத்தை பொறுத்தவரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஈரோஸ்நவ். லயன்ஸ்கேட் பிளே, ஹோய்சொய் (Hoichoi), மனோரமாமேக்ஸ், ஸீமரோ, அல்ட்ரா, ஹுங்கமாபிளே, இபிஐகான், டிவோ டிவி, கிளிக் (Klikk) நம்மபிலிக்ஸ் (Nammaflix),டோலிவுட் மற்றும் ஷாட்ஸ் டிவி ஆகிய 14 ஓடிடி சந்தாக்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சிங்கிள் லாக்இன் உடன் 40 எம்பிபிஎஸ் வேகத்திலான அன்லிமிடெட் இன்டர்நெட்டையும் நீங்கள் பெறுவீர்கள். உடன் ஏர்டெல் 4கே எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸில் 350 சேனல்களையும் பெறுவீர்கள்.

  Also Read : பென்ஸ் காரை விட விலை அதிகமான LG டிவி - இந்தியாவில் அறிமுகம்!

  ரூ.1,099 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்: அடுத்ததாக உள்ள ரூ.1099 திட்டத்தை பொறுத்தவரை ரூ.699 திட்டத்தை போலவே இதுவும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஈரோஸ்நவ். லயன்ஸ்கேட் பிளே, ஹோய்சொய் (Hoichoi), மனோரமாமேக்ஸ், ஸீமரோ, அல்ட்ரா, ஹுங்கமாபிளே, இபிஐகான், டிவோ டிவி, கிளிக் (Klikk) நம்மபிலிக்ஸ் (Nammaflix),டோலிவுட் மற்றும் ஷாட்ஸ் டிவி ஆகிய 14 ஓடிடி சந்தாக்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சிங்கிள் லாக்இன் உடன் 200 எம்பிபிஎஸ் வேகத்திலான அன்லிமிடெட் இன்டர்நெட்டையும் நீங்கள் பெறுவீர்கள். உடன் ஏர்டெல் 4கே எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸில் 350 சேனல்களையும் பெறுவீர்கள்.

  ரூ.1,599 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்:

  மூன்றாவது திட்டமான ரூ.1,599 ரீசார்ஜ் ஆனது கூடுதல் ஓடிடி சலுகைகளாக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்றவைகளை வழங்கும். உடன் வழக்கம் போல டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் சோனிலிவ், ஈரோஸ்நவ். லயன்ஸ்கேட் பிளே, ஹோய்சொய் (Hoichoi), மனோரமாமேக்ஸ், ஸீமரோ, அல்ட்ரா, ஹுங்கமாபிளே, இபிஐகான், டிவோ டிவி, கிளிக் (Klikk) நம்மபிலிக்ஸ் (Nammaflix), டோலிவுட் மற்றும் ஷாட்ஸ் டிவி ஆகிய 14 ஓடிடி சந்தாக்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சிங்கிள் லாக்இன்-ஐ வழங்கும். ஆனால் இது 300 எம்பிபிஎஸ் வேகத்திலான அன்லிமிடெட் இன்டர்நெட்டை வழங்கும். மேலும் மற்ற திட்டங்களில் பார்த்தது போல இதுவும் ஏர்டெல் 4கே எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் வழியாக 350 சேனல்களின் அணுகலை உங்களுக்கு வழங்கும்.

  புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களை பெறுவதற்கான கூடுதல் செலவுகள் என்னென்ன?

  ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களை பெற நீஙகள் ஏர்டெல் 4கே ஹைப்ரிட் டிவி பாக்ஸிற்கு ரூ.2,000 என்கிற ஒன்-டைம் பேமெண்ட்-ஐ செலுத்த வேண்டும். இது தவிர்த்து இந்த திட்டங்களின் அணுக கிடைக்கும் அன்லிமிடெட் இன்டர்நெட் என்பது எஃப்யுபி (fair use policy - FUP) வரம்பின் கீழ் மாதந்தோறும் 3333ஜிபி (3.3டிபி) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Airtel