விண்ணப்பித்த 22 நிறுவனங்கள்: இந்தியர்களுக்கு 12 லட்சம் வேலைகள்.. ரூ.11 லட்சம் கோடி முதலீடு குறித்து மத்திய அரசு விளக்கம்..

ஆப்பிள், சாம்சங், ஃபாக்ஸ்கான், பெக்ட்ரான் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பித்த 22 நிறுவனங்கள்: இந்தியர்களுக்கு 12 லட்சம் வேலைகள்.. ரூ.11 லட்சம் கோடி முதலீடு குறித்து மத்திய அரசு விளக்கம்..
ravishankar prasad
  • Share this:
ஆப்பிள், சாம்சங், ஃபாக்ஸ்கான், பெக்ட்ரான் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ள முதலீடு ரூ.11 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மொபைல்போன் உற்பத்தியை தொடங்கும் நிறு வனங்களுக்காக மத்திய அரசு ரூ.41 ஆயிரம் கோடியை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக ஒதுக்கியுள்ளது. இந்த சலுகையைப் பெற 22 நிறுவனங்கள் ஆர்வத்துடன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதன்மூலம் 12 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதில் 3 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 9 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

22 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியைத் தொடங்க விண்ணப்பித்துள்ளன. தைவான், தென் கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற விரும்பும் வெளி நாட்டு நிறுவனங்கள், ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க வேண்டும். இந்த பிரிவின் கீழ் சாம்சங், ஃபாக்ஸ்கான், ரைஸிங் ஸ்டார், விஸ்ட்ரோன், பெகட்ரோன் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட் ரோன் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஸ்மார்ட்போன் தயாரித்து தரும் நிறுவனங்களாகும்.


சீன நிறுவனங்கள் எதுவும் விண்ணப்பிக்கவில்லை. இந்த திட்டத்தின் மூலமாக 2025-ல் இத்துறையின் உற்பத்தி வருவாய் ரூ.10 லட்சம் கோடியை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது” என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading