வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கொள்கையை திரும்ப பெறாவிட்டால் நடவடிக்கை - மத்திய அரசு எச்சரிக்கை

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய தரவு கொள்கையை திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

 • Share this:
  வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பிரைவசி பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. மே 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய பாலிசியை பயனாளர்கள் அப்டேட் செய்யுமாறு அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பயனர்கள் அப்டேட் செய்யாவிட்டால், தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்தலாம், ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு குறித்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புக்கு முதலில் பரிசீலிப்பதாக தெரிவித்த வாட்ஸ் அப், பின்னர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால், வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக கருத்தப்படும் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

  இந்தநிலையில், தனிமனித தரவுகள் தொடர்பான புதிய கொள்கையை திரும்பப் பெறுமாறு, வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில், புதிய கொள்கை தனி மனித பாதுகாப்பு கொள்கைகளுக்கு எதிரானது எனவும் இந்திய மக்களின் உரிமைகளை காயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட தகவல் தொடர்புக்காக இந்தியர்கள் வாட்ஸ்-அப் செயலியை சார்ந்து இருக்கும் சூழலில், பொறுப்பற்ற முறையில் செயல்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையே வாட்ஸ் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாகவும், அடுத்த 7 நாட்களுக்குள் திருப்திகரமான முடிவை எடுக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: