Home /News /technology /

புத்துயிர் பெறும் BSNL நிறுவனம்... ரூ.1.64 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

புத்துயிர் பெறும் BSNL நிறுவனம்... ரூ.1.64 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50,631 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது

    மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) புத்துயிர் பெறுவதற்கான மற்றொரு முயற்சியாக, கடந்த ஜூலை 27 அன்று மத்திய அமைச்சரவை ரூ1.64 லட்சம் கோடி மறுமலர்ச்சி பேக்கேஜுக்கு ஒப்புதல் அளித்தது.

    மேலும் இதன் ஒரு பகுதியாக பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நிறுவப்பட்ட பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) பிஎஸ்என்எல்-உடன் இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் நல்ல பலன்கள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. BSNL நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சனை என்ன, புத்துயிர் கொடுக்க அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    BSNL-ல் என்ன பிரச்சனைகள் உள்ளன?

    தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது BSNL நிறுவனம். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50,631 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார். 2019-20ல் BSNL-ன் இழப்பு ரூ.15,500 கோடியாக இருந்த நிலையில், இடையில் அறிவிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி பேக்கேஜ் காரணமாக 2020-21ல் நிறுவனத்தின் இழப்பு ரூ.7,441 கோடியாகக் குறைந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் தற்போது ரூ.33,000 கோடி கடனிலிருந்தாலும், வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற தனியார்த் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த கடனை கொண்டுள்ளது.

    Also Read:இந்தியர்களில் 10-ல் 9 பேர் ட்விட்டரை பயன்படுத்த இது தான் காரணம் - நிறுவனமே சொல்லியாச்சு

    கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, வோடஃபோனின் மொத்த கடன் ரூ.1,97,878.2 கோடியாக இருந்தது. அடுத்த 1 வருடத்தில் நிறுவனம் சுமார் ரூ.8,160 கோடி கடனை செலுத்த வேண்டியுள்ளது. அதே போல ஏர்டெல் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.1,23,500 கோடியில் சற்று தான் குறைந்துள்ளது. மேலும் BSNL-ல் அகில இந்திய அளவில் 4G கனெக்டிவிட்டி இல்லை. BSNL அதன் 4G கனெக்டிவிட்டியை வெளியிடும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 2020 ஆம் ஆண்டில் BSNL-க்கான 4ஜி டெண்டரை அரசு ரத்து செய்தது. சமீபத்தில் நிறுவனத்திற்கு 900/1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 44,993 கோடி ரூபாய் செலவில் ஈக்விட்டி இன்ஃப்யூஷன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் என்று அரசு கூறியது. தற்போதுள்ள சேவைகளை மேம்படுத்தவும், 4G சேவைகளை வழங்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை..

    இதனிடையே MTNL-ன் அதிக கடன் சுமை காரணமாக BSNL-MTNL இணைப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் BSNL - BBNL இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டில், நஷ்டத்தில் தத்தளிக்கும் 2 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான BSNL மற்றும் MTNL ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை அரசு முன்மொழிந்தது. BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு ரூ.38,000 கோடி அசட் மனிடைசேஷன் ப்ரோகிராம், ரூ.15,000 கோடி இறையாண்மை பத்திரங்களை வழங்குதல் மற்றும் விஆர்எஸ் ஓய்வு திட்டங்களைச் செயல்படுத்துவதையும் அரசு இலக்காகக் கொண்டுள்ளது.

    Also Read:Apple iPhone14 : iPhone-ன் அடுத்த அறிமுகம் - ரிலீஸ் தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

    அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தேவையான மற்ற நடவடிக்கைகளுடன், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்காக ரூ.29,937 கோடியை அரசு வழங்கும் என அறிவித்தார். இந்த நிதி திட்டத்தின் விளைவாக, BSNL-ன் இயக்க லாபம் 2020-21 இல் நேர்மறையாக மாறியது. தற்போது மீண்டும் மறுமலர்ச்சி பேக்கேஜை அரசு அறிவித்துள்ளது. ரூ. 40,000 கோடிக்கு மேலான ரொக்க ஆதரவைத் தவிர, BSNL-க்கான 4G மற்றும் 5G சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் நிர்வாக ஒதுக்கீடும், அதன் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த பேக்கேஜ் நான்கு ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் இதன் முடிவு தெரியும், BSNL 4ஜி சேவையை வெளியிடும் என்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கூறி இருக்கிறார்.
    Published by:Janvi
    First published:

    Tags: BSNL, Telecommunications

    அடுத்த செய்தி