Home /News /technology /

’இந்த’ 15 ஆப்ஸ் உங்கள் மொபைலில் இருக்கிறதா? உடனடியாக நீக்குங்கள்!

’இந்த’ 15 ஆப்ஸ் உங்கள் மொபைலில் இருக்கிறதா? உடனடியாக நீக்குங்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெரும்பாலும் ஆபத்துத்தரும் இந்த 15 செயலிகளில் போட்டோ எடிட்டிங் செயலிகளே இடம்பெற்றுள்ளன.

  • News18
  • Last Updated :
பயனாளர்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் செயலிகளைத் தொடர்ந்து கூகுள் ப்ளே ஸ்டோர்ஸ் நீக்கி வருகிறது. ஆனால், புதிதாக ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக 15 செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆபத்துத் தரும் 15 செயலிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூடுதலாக, இதுகுறித்த புகாரும் கூகுள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக கீழ்வரும் 15 செயலிகள் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்குமாறு பிரிட்டன் சைபர் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

பெரும்பாலும் ஆபத்துத்தரும் இந்த 15 செயலிகளில் போட்டோ எடிட்டிங் செயலிகளே இடம்பெற்றுள்ளன. ‘image editor’, ‘background cutout’, ‘autocut photo’ மற்றும் ‘autocut picture’ ஆகியன போட்டோ எடிட்டிங் சார்ந்த பெயர் கொண்ட செயலிகள். இதுபோன்ற பெயர்களைக் கண்டாலே அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

இதேபோல் மொபைல் ஸ்கேனிங் செய்ய உதவும் சில செயலிகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த 15 செயலிகளும் 2019 ஜனவரி முதல் ஜூலை மாதத்துக்கு இடையிலான காலகட்டத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இணைந்துள்ளன.

பிரச்னைக்குரிய செயலிகள்: Image Magic, Generate Elves, Savexpense, QR Artifact, Find your Phone, Scavenger Speed, Auto Cut Out Pro, Read QR Code, Flash on Calls & Msg, Photo Background, ImageProcessing, Background Cut Out, Background Cut Out, Auto Cut Out மற்றும் Auto Cut Out 2019.

மேலும் பார்க்க: ஃபாக்ஸ் ஸ்டாரை கைப்பற்றியது டிஸ்னி..!- சர்வதேச அந்தஸ்து பெற்ற ஹாட்ஸ்டார்

மின்னல் தாக்கும்போது செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது!
Published by:Rahini M
First published:

Tags: Play store

அடுத்த செய்தி