க்ரிப்டோகரன்ஸி நன்கொடைகளை ஏற்கத் தயார்- யுனிசெஃப் அறிவிப்பு

டிஜிட்டல் கரன்ஸி மூலமாக முதல் ஆளாக எத்திரியம் அறக்கட்டளை நன்கொடை அளிக்க உள்ளது.

க்ரிப்டோகரன்ஸி நன்கொடைகளை ஏற்கத் தயார்- யுனிசெஃப் அறிவிப்பு
இந்தியாவில் க்ரிப்டோகரன்ஸிக்கு தடை ஏதும் இல்லை என்ற உத்தரவு இந்தியாவில் புதிய பணக்காரர்களை உருவாக்கும் என பல டிஜிட்டல் நிதிசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
  • News18
  • Last Updated: October 11, 2019, 4:38 PM IST
  • Share this:
பிட்காயின், ஈதர் போன்ற க்ரிப்டோகரன்ஸி நன்கொடைகளை ஏற்கத் தயாராக இருப்பதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது.

ஐநா-வின் குழந்தைகளுக்கான பிரத்யேக அமைப்பாக யுனிசெஃப் செயல்பட்டு வருகிறது. ஐநா-வின் அமைப்பு ஒன்று க்ரிப்டோகரன்ஸி வாயிலாக நன்கொடையை ஏற்பது இதுவே முதல்முறை ஆகும். க்ரிப்டோகரன்ஸி வாயிலாகவே நன்கொடையைப் பெற்று அதன் வாயிலாகவே பகிர்ந்தளிக்கும் பணியும் நடைபெறும்.

அமெரிக்காவின் சில தன்னார்வ அமைப்புகள் ஏற்கெனவே க்ரிப்டோகரன்ஸி நன்கொடைகளைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து யுனிசெஃப் இயக்குநர் ஹென்ரெய்டா ஃபோர் கூறுகையில், “யுனிசெஃப் அமைப்பின் புதிய முயற்சி இது. வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை வளமாக்கும் என்றால் டிஜிட்டல் கரன்ஸிகளைப் பயன்படுத்தி முயற்சிக்கலாம். எங்களது வளர்ச்சிப் பணியில் க்ரிப்டோகரன்ஸி நன்கொடை என்பது அடுத்தக்கட்ட ஒரு நகர்வு ஆகும்” என்றார்.


அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள யுனிசெஃப் கிளைகளுக்கும் க்ரிப்டோகரன்ஸி வாயிலாக நன்கொடைகளை அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கரன்ஸி மூலமாக முதல் ஆளாக எத்திரியம் அறக்கட்டளை நன்கொடை அளிக்க உள்ளது.

மேலும் பார்க்க: ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனை: ரெட்மி, ரியல்மி போன்களுக்கு அசத்தல் ஆஃபர்

மாமல்லபுரத்தின் கதை
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading