• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்!

இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்!

கூகுள் பே

கூகுள் பே

இந்த முறை ஏற்கெனவே ஆப்பிள் பே-ல் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அமெரிக்காவில் இந்த டோக்கன் முறை ஆப்பில் பே-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கூகுள் பே தளத்தை மேலும் பாதுகாப்பானதாக்க பல அப்டேட் அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

பணப் பரிமாற்றம், உணவு டெலிவரி, தொழில் ரீதியான பரிமாற்றம் என அனைத்துக்கும் ஏற்ற வகையில் புதிய வெர்ச்சுவல் டோக்கன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூகுள் தகவலின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 67 மில்லியன் கூகுள் பே பயனாளர்கள் உள்ளனர். இந்தப் பயனாளர்கள் மூலம் ஆண்டுக்கு 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறதாம்.

’இந்தியாவுக்கான கூகுள்’ ஐந்தாம் ஆண்டு நிகழ்வில் இப்புதிய அப்டேட் அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. பேடிஎம், போன்பே, அமேசான் பே மற்றும் ஏர்டெல் பேமண்ட் போன்ற பணப்பரிவர்த்தனைத் தளங்களைத் தாண்டி புதிதாக வாட்ஸ்அப் பே சேவையும் விரைவில் வெளியாக உள்ளது. இத்தனை போட்டிகளையும் சமாளிக்கவே அப்டேட் ஆகியுள்ளது கூகுள் பே.

கூகுள் பே அறிமுகம் செய்துள்ள ‘வெர்ச்சுவல் டோக்கன் அட்டைகள்’ பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு ஏற்ற மிகச்சிறந்த அம்சமாகவே கருதப்படுகிறது. இம்முறையில், நீங்கள் உங்கள் விசா கார்டின் எண்ணை பதிவு செய்யத்தேவையில்லை. இதற்குப் பதிலாக தோராயமாக உருவாகும் ஒரு டோக்கன் எண் உங்களுக்குக் கிடைக்கும். இதன் மூலமாகவே பரிவர்த்தனையை செய்துகொள்ள முடியும். இந்த முறையால் உங்களது பரிவர்த்தனையின் எந்தவொரு உண்மையான விவரங்கள் வெளியாக வாய்ப்பே இல்லை என்கிறது கூகுள் பே.

இந்த முறை ஏற்கெனவே ஆப்பிள் பே-ல் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அமெரிக்காவில் இந்த டோக்கன் முறை ஆப்பிள் பே-ல் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக HDFC, ஆக்சிஸ், எஸ்பிஐ, கோடாக், ஸ்டாண்டர்டு ஆகிய வங்கிகள் இப்புதிய முறையில் இணைந்துள்ளன. இதர வங்கிகளும் விரைவில் இணைகின்றன. இன்னும் சில நாட்களிலேயே அத்தனை கார்டு மற்றும் வங்கிகளும் இப்புதிய அப்டேடட் கூகுள் பே தளத்தில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: டிவி விலை குறைகிறது... இறக்குமதி வரி நீக்கத்தால் அடித்த அதிர்ஷ்டம்!

ஆக்கிரமிப்பை அகற்றாமல் பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணி..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: