இந்திய
வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கையும் ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது.. வளர்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் - கர்நாடக முதல்வருக்கு கட்சி மேலிடம் உத்தரவு
இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வருகிறது. அதன் முகப்பு படத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு,
உத்தர பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு ஆகியவை முடக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மூன்றாவதாக முடக்கப்பட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.