Home /News /technology /

உங்கள் உபர் ரைடு கேன்சல் ஆகிறதா.. இனி அப்படி நடக்காது..!

உங்கள் உபர் ரைடு கேன்சல் ஆகிறதா.. இனி அப்படி நடக்காது..!

Uber

Uber

Uber Ride | ஓலா, உபர் நிறுவனங்கள் பயணிகளுக்கு செல்போன் மூலமாக ஆட்டோக்களை புக் செய்யும் வசதியை வழங்கி வருகின்றன. பயணிகள் எங்கிருந்து தனது பயணத்தை புக் செய்கிறார்களோ, அவர்களுக்கு அருகில் ரைடிற்காக காத்திருக்கும் ஓட்டுநருக்கு இந்த ரைடு செல்கிறது.

மேலும் படிக்கவும் ...

இப்போதெல்லாம் ஸ்டாண்டுகளிலுள்ள ஆட்டோக்களில் நாம் பயணம் செய்வது குறைந்துவிட்டது. தற்போது ஆட்டோ என்றாலே ஓலா, உபர் என்று மாறிவிட்டது.


இந்த நிறுவனங்கள் பயணிகளுக்கு செல்போன் மூலமாக ஆட்டோக்களை புக் செய்யும் வசதியை வழங்கி வருகின்றன. பயணிகள் எங்கிருந்து தனது பயணத்தை புக் செய்கிறார்களோ, அவர்களுக்கு அருகில் ரைடிற்காக காத்திருக்கும் ஓட்டுநருக்கு இந்த ரைடு செல்கிறது.


ஓட்டுநர் இந்த ரைடை ஏற்றக்கொள்ளும் போது பிக்கப் லொக்கேஷன் காண்பிக்கப்படும். அதன் பிறகு ஓட்டுநர் குறித்த இடத்திற்குச் சென்று பயணிகளை பிக்கப் செய்ததும், ட்ராப் லொக்கேஷன் (drop location) காட்டும். பயணிகளை ட்ராப்(drop) செய்ததும் பயணிகள் online app மூலமாகவோ அல்லது பணமாகவோ பயணதிற்கான கட்டணத்தை செலுத்துவார்கள்.



ஆனால் ஓட்டுநர்கள் சவாரிகளை பிக்கப் செய்தால் மட்டுமே ட்ராப் லொக்கேஷன் தெரியும், இதன் காரணமாக பெரும்பாலான ரைடர்கள், ஒரு ஆட்டோ லொக்கேஷன் அடிப்படையில் தங்கள் சவாரியை ஏற்றுக்கொள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றனர் அல்லது பல ரைடுகள் ரத்து செய்யும் புதிய சிக்கல்கள் உருவாகிறது. இதற்காக தற்போது உபர் நிறுவனம் (Uber) சில நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.


Also Read : தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்யும் டிவிட்டர் - இது எப்படி இயங்கும்?


அதிக அளவில் ரைடு ரத்துசெய்யப்படுவதால் Uber தற்போது ஓட்டுநருக்கு drop location காண்பிக்கும் வசதியை வழங்குகிறது. இதனால் ரைடுகள் ரத்து செய்வது குறையும், மேலும் ஓட்டுநர்களின் மன அழுத்தமும் குறையும்.


இந்தியா முழுவதும் உள்ள உபர் இயங்குதளத்தில் உள்ள ஓட்டுநர்கள் பயணத்தை ஏற்க முடிவு செய்வதற்கு முன்பு ட்ராப் லொக்கேஷனை பார்க்க முடியும் என்று Uber தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அம்சங்களைச் சேர்ப்பதால் நாட்டில் வண்டிகள் மற்றும் ஆட்டோக்களின் செயல்பாடு சிறந்த முறையில் நடைபெறும் எனவும் உபர் நிறுவனம் கருதுகிறது.



தேசிய ஓட்டுநர் ஆலோசனைக் குழுவிலிருந்து பெறப்பட்ட கருத்தைத் தொடர்ந்து, பயணங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் உபர் நிறுவனம் கடந்த மே மாதம் இந்தியாவில் ஆறு மெட்ரோ பெரு நகரங்களில் இந்த அப்டேட்டை கொண்டு வந்ததுள்ளது. இதனால் பயண ரத்துகள் குறைவதற்கான வாய்புகள் அதிகம் உண்டு என்றும் கூறியுள்ளது.


Also Read : இந்த 8 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யுங்கள்.!


உபர் நிறுவனம், பயண ஏற்பு வரம்பை நீக்கியும், பல அம்சங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது.அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்களின் கருத்துக்களை Uber தொடர்ந்து கண்காணித்தும், அவர்களுக்கு தேவைப்படும் மாற்றங்களை வரபோகும் நாட்களில் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.



உபர் இப்போது ரைடர்களுக்கு ஒரு பயணத்தை முன்பதிவு செய்யும் போது காத்திருப்பு கட்டணங்கள் குறித்த அறிவிப்பை பயணருக்கு( push notification) மூலம் தெரிவிக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓட்டுநர் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, Uber பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் செலவை ஈடுகட்ட 15 சதவிகிதம் வரை கட்டண உயர்வையும் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read : Aadhaar Update | புவன் ஆதார் போர்டல் பற்றி உங்களுக்கு தெரியுமா.?


ரைடர்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது அவர்களுக்கு நீண்ட தூர பிக்-அப் கட்டணத்தை வழங்குவதோடு, ஓட்டுநர்கள் ஆன்லைன் பேமெண்ட் பரிமாற்றம் போன்றவற்றை எளிதில் பெறுவதற்காக, எல்லா வாரநாட்களிலும் கட்டணம் செலுத்தும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: India, Uber

அடுத்த செய்தி