Home /News /technology /

உபர் நிறுவனத்தின் தகவல்களைத் திருடிய 18 வயது ஹேக்கர் - தனிநபர் தரவுகள் வெளியாகவில்லை என்று உபர் தகவல்!

உபர் நிறுவனத்தின் தகவல்களைத் திருடிய 18 வயது ஹேக்கர் - தனிநபர் தரவுகள் வெளியாகவில்லை என்று உபர் தகவல்!

உபர் நிறுவனம்

உபர் நிறுவனம்

உபர் நிறுவனத்தின் தகவல்கள் 18 வயது ஹேக்கரால் திருடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பிரபல கார் வாடகை சேவை நிறுவனமான உபரின் தகவல்களை 18 வயது ஹேக்கர் ஹேக் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தனிப்பட்ட யூசர்களின் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை எனவும்  அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கார் வாடகை சேவையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று  உபர் நிறுவனம் ஆகும். என்ன தான் பல்வேறு கார் வாடகை சேவை நிறுவனங்கள் இருந்தாலும் உபருக்கென்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். வெறும் கார் மட்டுமின்றி ஆட்டோ, டூ வீலர் போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது. முதன் முதலில் இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் மட்டும் துவங்கப்பட்ட இந்த சேவை தற்போது இந்தியாவில் உள்ள பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது.  உபர் ஈட்ஸ் என்ற பெயரில் தற்போது  உணவு டெலிவரியை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உபர் நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் உபரின் டேட்டா பேஸுக்குள் புகுந்த  ஹேக்கர் அந்த நிறுவனத்தின் பல தகவல்களைத் திருடி உள்ளதாகத் தெரிகிறது.

அதில் அந்த நிறுவனத்தின் பல்வேறு சாப்ட்வேர்கள், டூல்கள், அமேசான் வெப் சர்வீஸ், கூகுள் கிளவுட் ஆகியவற்றினை ஹேக் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஹேக் செய்த பின்பு அந்த கம்பெனியின் வலைத்தளத்தில் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்குத் தெரியும் வகையில் செய்தி ஒன்றையும் பதிவிட்டுச் சென்றுள்ளான்.

அதில் “உபர் தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்குகிறது” எனப் பதிவிட்டிருந்தான். முதலில் இது ஏதோ விளையாட்டு என லேசாக எடுத்துக் கொண்ட பணியாளர்கள் அதன் பின்பு தான் இந்த விஷயத்தின் வீரியத்தினை புரிந்து கொண்டனர். ஆனால் அதற்குள் அந்நிறுவனத்தின் முக்கிய தகவல்களை அந்த ஹேக்கர் திருடி விட்டதாகத் தெரிகிறது.

இதைப் பற்றிக் கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்ட உபர் நிறுவனம், “மொத்த தகவல்களும் திருடப்பட்டது என வெளியான தகவல் தவறானது.  எங்கள் நிறுவனத்தின் சில வசதிகள் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் எனினும், அதில் தனிப்பட்ட யூசர்களின் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை.

ஹேக்கிங் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட உடனேயே நாங்கள் அனைத்து சர்வர்களையும் நிறுத்தி விட்டோம். எனவே அதற்கு மேல் அந்த ஹேக்கரால் எந்த தகவல்களையும் திருட முடியாது மேலும் இதைப்பற்றி நாங்கள் சட்ட அமலாக்க நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஹேக்கருக்கு 18 வயது இருக்கலாம் என்றும் உபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இனி விண்வெளிக்கே டூர் போகலாம்... விண்வெளி பயணத்தை தொடங்கும் சீனா!

உபர் நிறுவனத்தின் தகவல்கள் திருடப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டும் இதேபோன்று ஒரு சைபர் அட்டாக் நிகழ்த்தப்பட்டுக் கிட்டத்தட்ட 57 மில்லியன் டிரைவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஹேக் செய்த அந்த ஹேக்கர், அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு, உபரின் பாதுகாப்பு அம்சம் வலிமையற்றதாக உள்ளது என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Janvi
First published:

Tags: Hacked, Personal data theft, Uber

அடுத்த செய்தி