• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 78 iPhone திருட்டு - இரண்டு Amazon ஊழியர்கள் கைது!

சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 78 iPhone திருட்டு - இரண்டு Amazon ஊழியர்கள் கைது!

மாதிரி படம். (reuters)

மாதிரி படம். (reuters)

திருடப்பட்ட ஐபோன்களை முற்றிலும் இயங்காதபடி செய்யமுடியும், ஐபோன்களைத் திருடியவர்களை அதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக அதிகாரிகளால் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹரியானா மாநிலம் பிலாஸ்பூர் பகுதிகளில் ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் (Amazon) கிடங்கு அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவாலால் இந்த கிடங்கில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு  பாதுகாப்பு சோதனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இ-காமர்ஸ் தளமான அமேசான் (Amazon) கிடங்கிலிருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள 78 ஸ்மார்ட்போன்களை (Smartphone) திருடியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் அமேசான் இந்தியாவின் (Amazon India) கிடங்கில் பணிபுரிந்த அன்சார் உல் ஹக் மற்றும் நவாப் சிங் என்ற இருவர் தான் இந்த திருட்டை மேற்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து குர்கான் போலீசார் சில நாட்களுக்கு முன்னர் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) அறிக்கையின்படி, அமேசானில் வேலை செய்த நபர் மற்றொருவரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு ஐபோன்களை (iPhone) பிளான் பண்ணி திருடியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

திருடப்பட்ட 78 மொபைல் போன்களில் 38 ஐபோன்கள் (iPhone) கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாள் போலீஸ் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஜமல்பூர் கிராமத்தில் உள்ள அமேசானின் கிடங்கிலிருந்து இருவரும் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பினால் பல நிறுவனங்களில் என்ட்ரி செக்கிங் அவ்வளவாக செய்யப்படுவதில்லை அந்த வாய்ப்பை இந்த இருவரும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கிடங்கில் இருப்பு வைத்திருந்த மொபைல் போன்களைத் திருடி, தங்கள் உடை மற்றும் உடமைகளில் மறைத்து வெளியே எடுத்து வந்திருக்கின்றனர். இப்போதுள்ள செக்யூரிட்டி தளர்வு நிலைமையால் யாரும் தங்களின் குற்றத்தை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் சில ஆதாரங்களை விட்டுச் சென்றனர், ”என்று குர்கான் காவல்துறையின் அதிகாரி சுபாஷ் பொக்கன் கூறினார். 

அமேசான் நிறுவனம், ஆகஸ்ட் 28 அன்று, தனது வழக்கமான ஆய்வை மேற்கொண்டது. அப்போது 78 ஐபோன் பெட்டிகள் காலியாக இருப்பது அதில் கண்டறியப்பட்டது. "நிறுவனம் திருட்டைக் கண்டுபிடித்தவுடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருமே தங்கள் வேலையை விட்டு வெளியேறினர். விசாரணையின் போது, அவர்கள் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை தங்கள் வீடுகளில் மறைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை விற்க இருந்ததாகவும் அவர்கள் கூறினர், ”என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார். 

Also read... Gold Rate | சவரனுக்கு ரூ.176 குறைந்தது தங்கம் விலை... மாலை நிலவரம் என்ன?

விரைவில் மற்ற கூட்டாளிகள்  கைது செய்யப்படுவார்கள் என்றும் மீதமுள்ள ஐபோன்கள் மீட்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆன்லைன் சந்தையாக நாங்கள் எந்தவொரு திருட்டு சம்பவத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த விவகாரத்தை விசாரித்த உள்ளூர் போலிஸுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ”என்று அவர் கூறினார். 

ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து அமேசான் இந்திய நிர்வாகம் சார்பில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் திருடப்பட்ட ஐபோன்களை முற்றிலும் இயங்காதபடி செய்யமுடியும், ஐபோன்களைத் திருடியவர்களை அதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக அதிகாரிகளால் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: