• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • முற்றிலும் Block செய்யாமல் ஃபாலோயர்ஸை நீக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய ட்விட்டர்!

முற்றிலும் Block செய்யாமல் ஃபாலோயர்ஸை நீக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய ட்விட்டர்!

Twitter

Twitter

இறுதியாக குறிப்பிட்ட ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த அம்சத்தை பயன்படுத்திய பிறகு உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின் ட்விட்டர் டைம் லைனில் தெரியாது.

  • Share this:
    சோஷியல் மீடியாக்களில் ட்விட்டர் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் யூஸர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் ட்விட்டர் புதிய தனியுரிமை தொடர்பான அம்சத்தை வெளியிட்டு உள்ளது. இந்த அம்சம் தற்போது வெப் வெர்ஷனில் பயன்படுத்தும் ட்விட்டருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ட்விட்டரின் இந்த லேட்டஸ்ட் அம்சம் ஃபாலோயர்ஸை முற்றிலும் பிளாக் செய்யாமல், அவர்களை ஃபாலோயர் லிஸ்ட்டில் இருந்து நீக்க யூஸர்களை அனுமதிக்கிறது.

    கடந்த மாதம் முதல் ட்விட்டர் இந்த அம்சத்தை டெஸ்ட்டிங் செய்து வந்த நிலையில், தற்போது முதலாவதாக வெப் வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய இந்த புதிய அம்சத்தின் படி ஒரு ட்விட்டர் யூஸர் தனது ஃபாலோயர் லிஸ்ட்டில் இருக்கும் ஒருவரை நீக்கியவுடன், நீக்கப்பட்ட அந்த யூஸரின் டைம் லைனில் அவரை நீக்கிய யூஸரின் ட்விட்கள் இது முதல் தானாகவே தோன்றாது.

    அதே போல இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஒரு யூஸர் அகற்றும் ஃபாலோயருக்கு, இந்த மற்றம் தொடர்பான நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் காட்டப்படாது என்றும் ட்விட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்த புதிய அம்சம் பற்றி ட்விட்டர் நிறுவனம் @TwitterSupport மூலம் யூஸர்களுக்கு அறிவித்தது.

    சமீபத்திய இந்த அப்டேட் யூஸர்கள் தங்கள் சொந்த ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டின் கண்காணிப்பாளராக இருக்க அனுமதிக்கும் என்று ட்விட்டர் கூறி இருக்கிறது. இதன் மூலம் ட்விட்டர் யூஸர்கள் தங்கள் ப்ரொஃபைல் பேஜில் இருக்கும் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் இருந்து யாரையும் நீக்கி கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

    * முதலில் ப்ரொஃபைல் பேஜ் சென்று Followers-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

    * பின்னர் நீங்கள் எந்த ஃபாலோயரை ரீமூவ் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயருக்கு அடுத்து காணப்படும் த்ரீ டாட் ஐகானை (three-dot icon) க்ளிக் செய்ய வேண்டும்.

    Also read... வாட்ஸ்அப் அப்டேட் - விரைவில் வாய்ஸ் மெசேஜில் வரவுள்ள புதிய அம்சம்!

    * இறுதியாக குறிப்பிட்ட ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த அம்சத்தை பயன்படுத்திய பிறகு உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின் ட்விட்டர் டைம் லைனில் தெரியாது. ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளபடி நீங்கள் ரிமூவ் செய்யும் ஃபாலோயர்ஸுக்கு , அவரை உங்கள் ஃபாலோயர் லிஸ்ட்டில் இருந்து தூக்கியதற்கான அறிவிப்புகள் ஏதும் காட்டப்படாது.

    இந்த புதிய அம்சம் பெரிய ஃபாலோயர்ஸ் லிஸ்ட் கொண்டுள்ள அதே சமயம் அவர்களை முற்றிலும் பிளாக் செய்ய விரும்பாத யூஸர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டிற்கு தவறான செய்திகளை அல்லது DM-களை அனுப்பும் யூஸர்களை தற்காலிகமாக தடுக்கும். தவிர நீங்கள் ஒரு ஃபாலோயரை நீக்கி விட்டாலும் கூட, அவர்களாக அதை பார்த்து கவனித்து மீண்டும் உங்களை ஃபாலோ செய்ய விரும்பினால் மீண்டும் அவர்கள் உங்களை ஃபாலோ செய்யலாம். ஆனால் முன்பு ஒரு ஃபாலோயரை பிளாக் மற்றும் அன்பிளாக் செய்வது மேனுவலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: