Home /News /technology /

ட்விட்டரில் வீடியோ பிளேபேக் ஸ்பீடை குறைக்க & அதிகரிக்க உதவும் புதிய அம்சம் அறிமுகம்!

ட்விட்டரில் வீடியோ பிளேபேக் ஸ்பீடை குறைக்க & அதிகரிக்க உதவும் புதிய அம்சம் அறிமுகம்!

ட்விட்டர்

ட்விட்டர்

Twitter: முன்னரே குறிப்பிட்டபடி வீடியோ பிளேபேக் வேகத்திற்கான விருப்பங்களை அணுகக்கூடிய பயனர்கள் வீடியோவின் வேகத்தை மாற்ற உதவும் சிறிய கியரைப் பார்ப்பார்கள். அதன் கீழ் குறிப்பிட்ட வீடியோ கன்டென்ட்டின் வேகத்தை 0.25x வரை குறைக்கலாம் அல்லது 2x வரை வேகப்படுத்தலாம்.

மேலும் படிக்கவும் ...
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வீடியோக்களின் பிளேபேக் ஸ்பீடை (playback speed) சரிசெய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வெப் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான ஆப்பில் புதிய வீடியோ பிளேபேக் ஸ்பீட் விருப்பங்களை சோதனை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் தனது சமூக ஊடக தளம் வழியாக அறிவித்துள்ளது.

இந்த சோதனையின் ஒரு பகுதியாக சில ட்விட்டர் யூசர்கள், வீடியோக்களைப் பார்க்கும்போது அதன் வேகத்தை மாற்ற உதவும் சிறிய கியரையும் (gear) காண்பார்கள். அதனை பயன்படுத்தி வீடியோவின் பிளேபேக் வேகத்தை மெதுவாக்கவோ அல்லது வேகப்படுத்தவோ முடியும். இந்த புதிய ட்விட்டர் அம்சம் மெல்ல மெல்ல தான் வெளிவருகிறது என்பதும், எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்க கூடியதாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



அதாவது இந்த வீடியோ பிளேபேக் ஸ்பீட் ஆப்ஷன் ஆனது ட்விட்டரில் சோதனை முறையின் கீழ் உள்ளது மற்றும் தற்போது இது சில யூசர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி வீடியோ பிளேபேக் வேகத்திற்கான விருப்பங்களை அணுகக்கூடிய பயனர்கள் வீடியோவின் வேகத்தை மாற்ற உதவும் சிறிய கியரைப் பார்ப்பார்கள். அதன் கீழ் குறிப்பிட்ட வீடியோ கன்டென்ட்டின் வேகத்தை 0.25x வரை குறைக்கலாம் அல்லது 2x வரை வேகப்படுத்தலாம்.

அதாவது இந்த அம்சம், வீடியோ கன்டென்டை பயன்படுத்துவதில் யூசர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும். முன்னரே குறிப்பிட்டபடி, இதன் அம்சம் வெப் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான ஆப்பில் மட்டுமே (அதுவும் சோதனை முறையின் கீழ்) அணுக கிடைக்கிறது. அதாவது ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான ட்விட்டர் ஆப்பில் இந்த அம்சம் இன்னும் வெளிவரவில்லை.

இதுதவிர்த்து ட்விட்டர் நிறுவனம் புதிய ட்விட்டர் ஆர்டிக்கல்ஸ் (Twitter Articles) அம்சத்திலும் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது, இது யூசர்கள் நீண்ட டெக்ஸ்ட் உடன் கூடிய ட்வீட்களை போஸ்ட் செய்ய அனுமதிக்கும்.

Also read... காதலர் தினம் 2022: சிங்கிளாக இருப்பவர்கள் முயற்சிக்க வேண்டிய சில ஐபோன் டேட்டிங் ஆப்ஸ்கள்...!

ரிவர்ஸ் இன்ஜினியரிங் நிபுணரான ஜேன் மஞ்சுன் வோங், ட்விட்டரில் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ட்விட்டர் பிளாட்ஃபார்மில் தற்போதுள்ள 280 வேர்ட்ஸ் என்கிற வரம்புக்கு அப்பால் போஸ்ட்களை எழுத நிறுவனம் அனுமதிக்கலாம். தற்போது, ​​யூசர்கள் 'த்ரெட்'களைப் பயன்படுத்தி நீண்ட டெக்ஸ்ட் போஸ்ட்களை ட்வீட் செய்யலாம், ஆனால் இந்த புதிய அம்சம் ஒரு ட்வீட்டில் எந்த தடையும் இன்றி தேவையான டெக்ஸ்ட்டை அனுமதிக்கும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ட்விட்டர் ஆர்டிக்கல்ஸ் குறித்து ட்விட்டர் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டர் அதன் உலகளாவிய யூசர்களுக்கு ட்வீட்களுக்குள் ரிப்ளைகளை டவுன்வோட் (downvote) செய்ய அனுமதிக்கும் சோதனை விருப்பத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்தது. நினைவூட்டும் வண்ணம், இதே அம்சம் கடந்த ஆண்டு சில ஐஓஎஸ் யூசர்களிடம் சோதிக்கப்பட்டது.

இந்த டவுன்வோட் ரிப்ளைஸ் அம்சமானது, ஒரு உரையாடலின் போது தொடர்புடைய ரிப்ளைகளின் வகைகளைப் புரிந்துகொள்ள யூசர்களுக்கு உதவுவதாக ட்விட்டர் கூறுகிறது. மேலும் இந்த டவுன்வோட்ஸ் பொதுவெளியில் தெரிவதில்லை. அதாவது ரெடிட் உள்ளிட்ட தளங்களில் மக்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை விரும்பினார்களா அல்லது விரும்பவில்லையா என்பதைப் புரிந்துகொள்வதற்காக, பொதுப்பார்வையில் அப்வோட்ஸ் மற்றும் டவுன்வோட்ஸ் என இரண்டும் தெரியும். அதுபோல் ட்விட்டர் எதையும் காட்சிப்படுத்தாது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Twitter

அடுத்த செய்தி