அரசியல் விளம்பரங்களுக்கு தடை...! ட்விட்டர் சி.இ.ஓ அதிரடி அறிவிப்பு

”ட்விட்டரின் இந்த அறிவிப்பு, பேஸ்புக் நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது”

அரசியல் விளம்பரங்களுக்கு தடை...! ட்விட்டர் சி.இ.ஓ அதிரடி அறிவிப்பு
ட்விட்டர்
  • News18
  • Last Updated: October 31, 2019, 9:01 AM IST
  • Share this:
தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரசார களமாக சமூக வலைதளங்கள் இருக்கும் நிலையில், ட்விட்டர் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்களை அனுமதிக்காது என்று அதன் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் சமூக வலைதளங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள பல கோடிகள் செலவிடப்படுகின்றன. இதில் பெரும்பாலும் தவறான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரத்தில் புகார்களை எதிர்கொண்டு விசாரணைகளையும் சந்தித்தது. இதனை அடுத்து, அரசியல் கட்சிகளின் விளம்பர பக்கங்கள் எவ்வளவு ரூபாய் செலவளித்துள்ளது என்று அனைவரும் பார்க்கும் வண்ணம் செட்டிங்-கள் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் ஒட்டுமொத்தமாக அரசியல் விளம்பரங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ட்விட்டரின் இந்த அறிவிப்பு, பேஸ்புக் நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published: October 31, 2019, 9:01 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading