ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ட்விட்டரே வேண்டாம்.. கடையை மூடும் பயனாளர்கள்.. கூட்டத்தைக் கவரும் மஸ்டோடன் செயலி!

ட்விட்டரே வேண்டாம்.. கடையை மூடும் பயனாளர்கள்.. கூட்டத்தைக் கவரும் மஸ்டோடன் செயலி!

மஸ்டோடன்

மஸ்டோடன்

மஸ்டோடன் என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் 2016 ஆம் ஆண்டிலிருந்தே மஸ்டோடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப் போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ட்விட்டர் இனி அவ்வளவுதான், மூடுவிழா நடத்த வேண்டும் என்றும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. பல மாதங்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி விட்டார். அதன் பிறகு அதிரடியான பல மாற்றங்களை செய்து வருவது அனைவரும் அறிந்ததுதான். ஏற்கனவே ட்விட்டருக்கு மாற்றாக பல விதமான புதிய மைக்ரோ பிளாகிங் தளங்கள் அறிமுகமாகி உள்ளன. அவற்றில் சமீபத்தில் மஸ்டோடன் என்ற தளத்தை யூசர்கள் அதிகம் விரும்பி இருக்கிறார்கள். மஸ்டோடன் என்றால் என்ன இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  2016 இல் தொடங்கப்பட்ட மஸ்டோடன் (mastodon)

  மஸ்டோடன் என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் 2016 ஆம் ஆண்டிலிருந்தே மஸ்டோடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது டிவிட்டர் குழப்பத்தில் இருக்கும் நிலை மஸ்டோடனுக்கு சாதகமாக மாறியுள்ளது.

  மஸ்டோடன் என்பது ட்விட்டரைப் போன்ற மற்றும் ஒரு மைக்ரோ பிளாக்கிங் தளம் தான். இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதலாம். டிவீட் என்று சொல்வது போலவே மஸ்டோடன் கணக்கில் பதிவுகள் டூட்ஸ் என்று கூறப்படுகிறது. இதில் டூட்ஸ்களுக்கு நீங்கள் பதில் அளிக்கலாம் மற்றும் ரீ-போஸ்ட் செய்யலாம். டூட்ஸ் யூசர்கள் ஒருவருக்கொருவர் பின்பற்றலாம். ஆனால் இவை கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 2.65 லட்சம் யூசர்கள் மஸ்டோடனில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சோசியல் நெட்வொர்க்ல் கிட்டத்தட்ட 6.5 லட்சம் யூசர்கள் இருக்கிறார்கள்.

  இந்தத் தளத்தில் தற்போது விளம்பரங்கள் இல்லை, எனவே, வணிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது தெரிவில்லை. அதே போல, இதில் இணைந்து, இயங்குவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

  Also Read : அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும்..! ஆனால் twitter ப்ளூ டிக்கிற்கு $8 கட்டாயம் - எலான் மஸ்க்!

  சர்வர்களில் இயங்கும் மஸ்டோடன்

  மஸ்டோடன் என்பது ட்விட்டருக்கு நிச்சயமாக உடனடியாக மாற்றாக வர முடியுமா என்பது கேள்விக்குறி தான்! ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்புகள் அதிகம். ட்விட்டரின் ஸ்பெஷாலிட்டியே குறைந்த அளவு வார்த்தைகளை பயன்படுத்தி செய்திகளைச் சொல்லுவது தான். அதே போலத்தான் மஸ்டோடனும் இயங்கி வருகிறது. மேலும், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சோசியல் நெட்வொர்க் செயலிகளை பொறுத்தவரை, இவை அனைத்துமே ஒரு நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன, கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் மஸ்டோடன் என்பது வெவ்வேறு நபர்கள் மற்றும் குழுக்கள் நடத்தும் சர்வர்களில் இயங்குகிறது.

  மஸ்டோடன் சர்வர்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

  வெவ்வேறு சர்வர்களில் இயங்கும் மஸ்டோடன் ஒரு சிலருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மஸ்டோடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

  ஃபேஸ்புக்கில் நமக்கு விருப்பமான குழுவில் சேர்கிறோமோ அதேபோல மஸ்டோடனில் பலவிதமான சர்வர்கள், பல கேட்டகரிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நாடு, நகரம், கலை, தொழில், விளையாட்டு, டெக்னாலஜி என்று நீங்கள் எதை விரும்புகிறீர்களோ உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நீங்கள் சர்வரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் கணக்கை பதிவு செய்யலாம். நீங்கள் எந்த சர்வரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். மற்ற சர்வர்களில் இருப்பவர்களையும் நீங்கள் பின்பற்ற முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட சர்வரைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்த கம்யூனிட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்வது ஒரு தொடக்கமாக இருக்கும்.

  சர்வர்களின் கூட்டாக, பரவலாக்கப்பட்ட தலைமைத்துவம் – பலம் மற்றும் பலவீனம்

  மஸ்டோடன் என்பது ஒரு ஒற்றை தளம் கிடையாது. இது ஒரு நபரின் கட்டுப்பாட்டில், அல்லது ஒரு நபரின் சொந்தமான ஒரு செயலையோ அல்லது சமூக வலைத்தளமோ கிடையாது. வெவ்வேறு சர்வர்கள் ஒன்றிணைந்த ஒரு இடம்தான் மஸ்டோடன். கலக்டிவ் நெட்வொர்க் என்று கூறப்படும் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு நிறுவனம் மற்றும் வெவ்வேறு இடங்களின் ஒருங்கிணைப்பு தான் மஸ்டோடன்.

  பல நபர்கள் ஒருங்கிணைந்த ஒரே லிங்க்கில் இந்த தளம் இயங்குவதால், இதை ஒரு நபரால் விற்பனை செய்யவோ, ஒரு நபரால் வாங்கவோ முடியாது என்பது இதனுடைய மிகப்பெரிய பலமாகும். இதனுடைய தலைமை மற்றும் உரிமை பலரிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சர்வரில் இயங்கி கொண்டிருக்கும் பொழுது அந்த சர்வரின் உரிமையாளர் திடீரென்று அதை நிறுத்திவிட்டால் உங்களுடைய கணக்கு செயலிழந்துவிடும். எனவே சர்வரின் உரிமையாளர்கள் தங்களுடைய சர்வர்களை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தால், அவர்கள் மூன்று மாதம் முன்பே அறிவிக்க வேண்டும்.

  மஸ்டோடன் தளத்தை யார் கண்காணிக்கிறார்கள்?

  மஸ்டோடன் தளத்தின் மிகப்பெரிய அட்வாண்டேஜ் என்பது அந்த தளத்தை யார் நிர்வாகம் செய்கிறார்கள், உள்ளடக்கத்தை யார் கண்காணிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி! வெவ்வேறு சர்வர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால் அந்த அந்த சர்வர்களின் உரிமையாளர்களே தன்னுடைய சர்வர்கள் பதிவு செய்திருக்கும் யூசர்களை கண்காணிக்கிறார்கள்.

  மஸ்டோடனுக்கு மிகப்பெரிய சவாலே இதன் அமைப்பு தான்

  ஒரு சில சர்வர்கள், மற்ற சர்வர்களுடன் இணைக்க வேண்டாம் என்ற முடிவில் ஒரு சில உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சில சர்வர்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அல்லது குறிப்பிட்ட விஷயத்திற்கு எதிரான உள்ளடக்கங்கள் இருக்கும். எனவே அத்தகைய சர்வர்களை வேறு சர்வர்களின் உரிமையாளர்கள் ப்ளாக் செய்தால் அந்த உள்ளடக்கங்கள் மற்றவர்களுக்கு தெரியாது. எனவே தற்போது அதிக யூசர்களை ஈர்த்துவரும் இந்த தளத்தில் சர்வர்கள் ஒன்றையொன்று பின் தொடர்வது அல்லது இணைக்காமல் இருப்பது என்று இரண்டுமே, இந்த தளத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

  ஒரு சர்வரில் இருக்கும் பதிவை பிடிக்கவில்லை, அதில் வெறுக்கத்தக்க பேச்சு அல்லது வேறு ஏதேனும் ஸ்பாம் செய்திகள் காணப்பட்டால், அதை ரிப்போர்ட் செய்யலாம். ஏற்கனவே பலவிதமான புகார்கள் பதிவாகி இருக்கின்றன. ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் பதிவுகளும் பதிவாகி இருக்கின்றன என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

  தற்போது பிரபலமாக இருக்கும் சர்வர்கள்

  சோஷியல் மற்றும் யூகே ஆகிய இரண்டு சர்வர்களும் தற்போது அதிக யூசர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நாளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். எனவே, அதனுடைய உரிமையாளரான ரயான் என்பவர் தற்காலிகமாக புதிதாக சைன்-அப் செய்வதை தடுத்து இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறார். அவருக்குமே திடீரென்று ஏன் இவ்வளவு நபர்கள் இணைந்துள்ளனர் என்று ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் பதிவு செய்தபோது சர்வர் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்தார்.

  Also Read : ட்விட்டரில் பாதுகாப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன.!

  ஜாக் டார்சியின் புதிய தளம்

  டிவிட்டரைக் கண்டுபிடித்தவரான ஜாக் டார்ஸி, ட்விட்டருக்கு போட்டியாக புளூ ஸ்கை என்ற ஒரு புதிய நெட்வொர்க்கை உருவாக்கி இருக்கிறார். அவரும் கூட தனது புதிய தளத்தை ஒரே தலைமையில் இயங்காமல், பரவலான தலைமைக் கொண்ட தளமாக அறிமுகம் செய்யவேண்டுமென்று என்ற விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Elon Musk, Twitter, Twitter new policy