டிவிட்டர் பற்றிய செய்திகள் வராத நாளே இருக்க முடியாது என்ற அளவுக்கு கடந்த சில மாதங்களாக அன்றாடம் டிவிட்டரில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் பற்றிய செய்தி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார், என்பதை ஒருபக்கம் உலகமே பார்த்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் டிவிட்டரில் மீண்டும் மிகப்பெரிய அளவுக்கு டேட்டா பிரீச் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில், சில மாதங்களுக்கு முன்பே API சம்மந்தப்பட்ட டேட்டா திருட்டு நடந்தது. அதையொட்டி, பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டன. ஆனால், தொடர்ந்து டிவிட்டர் தளத்தை பாதுகாப்பாக இயக்கம் முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும், டேட்டா ஹேக்கிங் பிரச்சனைகள் தீரவில்லை.
இதுவரை இல்லாத அளவுக்கு சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் டிவிட்டரில் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது மற்றும் இந்த யூசர்களின் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்கள் ஹாக்கிங் ஃபார்மில் பதிவேற்றப்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே ஜூலை மாதம் ஹேக்கிங் நடைபெற்ற பொழுது, டிவிட்டர் டேட்டாவை 30,000 டாலருக்கு விற்பனை செய்ததாக செய்தி வெளியானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 2022ல் டிவிட்டரில் ஏற்பட்ட ஒரு பாதுகாப்பு பிரச்சனை மூலமாக இந்த டேட்டா லீக் ஆகியிருக்கலாம் என்று டிவிட்டரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, தற்போது வெளியான யூசர்களின் தகவல்கள் இந்த திருட்டு ஏற்கனவே நடந்த API திருட்டோடு சம்மந்தப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யாமல், தீர்வு காணாமல் விட்டதால் சில பிரைவசி சம்மந்தப்பட்ட இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளன.
Also Read : ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கம்? - எலான் மஸ்க் ட்விட்டரில் தகவல்!
டிவிட்டர் ஒழுங்காக செயல்படவில்லை என்ற காரணத்தால், யூசர்களின் டேட்டாபேஸுக்கு $30,000 விலை வைத்து சிலர் பேரம் பேசி வருகிறார் என்று முன்பே கூறப்பட்டது. ஏற்கனவே டிவிட்டரில் நடந்த பல வித பிரச்சனைகளை சரிசெய்து, அவற்றை மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எலான் மஸ்க் பல முறை தெரிவித்துவந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்தத் தரவுகள் எலான் மஸ்கிற்கு புதிய பிரச்சனையை ஏற்படுத்தலாம் அல்லது புதிதாக உருவாக்கப்படும் விஷயங்களுக்கு இது தடையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தின் கூற்று படி, 54 லட்சம் யூசர்களின் டேட்டா மட்டுமல்லாமல், ஹேக்கர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்ட யூசர்களின் கணக்கு விவரங்களையும் சேர்த்து, கூடுதலாக 14 லட்சம் கணக்கின் விவரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
Also Read : உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மொத்த ஆக்டிவிட்டிஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி?
மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஆகிய இரண்டு விவரங்களை மட்டுமே பயன்படுத்தி ஹேக்கிங் செய்தவர்கள் அந்த யூசர்களை போலவே நடித்து வேறு முக்கியமான விவரங்களையும் பெறலாம் என்ற ஆபத்தும் இருக்கிறது.
எனவே, இது போன்ற டேட்டா திருட்டைத் தடுக்க, டூ-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷனை இயக்குவது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hacked, Tamil News, Technology, Twitter