Home /News /technology /

யூஸர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றுகிறதா Twitter நிறுவனம்? - வைரலான ட்வீட்!

யூஸர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றுகிறதா Twitter நிறுவனம்? - வைரலான ட்வீட்!

Twitter

Twitter

Twitter | மற்ற பிரபல சோஷியல் மீடியாக்களில் உள்ளது போல எடிட் ஆப்ஷன் ட்விட்டரில் தற்போது வரை கொடுக்கப்படவில்லை. ஏதேனும் தவறாக ட்விட் செய்துவிட்டால் அதனை டெலிட் மட்டுமே செய்ய முடியுமே தவிர எடிட் செய்ய முடியாது. எனவே ட்விட்டர் யூஸர்கள் "எடிட் ஆப்ஷனை" எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
உலகளவில் பிரபலமாக உள்ள சோஷியல் மீடியாக்களில் ட்விட்டருக்கென்று தனி இடம் உண்டு. 280 எழுத்துகளில் மெசேஜ்கள் அல்லது ட்விட்களை ஷேர் செய்யும் பிரபல சோஷியல் மீடியாவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான யூஸர்களையும் ட்விட்டர் கொண்டுள்ளது.

எனினும் மற்ற பிரபல சோஷியல் மீடியாக்களில் உள்ளது போல எடிட் ஆப்ஷன் ட்விட்டரில் தற்போது வரை கொடுக்கப்படவில்லை. ஏதேனும் தவறாக ட்விட் செய்துவிட்டால் அதனை டெலிட் மட்டுமே செய்ய முடியுமே தவிர எடிட் செய்ய முடியாது. எனவே ட்விட்டர் யூஸர்கள் "எடிட் ஆப்ஷனை" எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட் அக்கவுண்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மெசேஜை ட்விட் செய்தது. அந்த ட்விட் "we are working on an edit button" என்பதாகும். அதாவது எடிட் ஆப்ஷனை ட்விட்டரில் சேர்ப்பது தொடர்பாக வேலை செய்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. இதனை பார்த்த பல ட்விட்டர் யூஸர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி பலருக்கு 1 நொடி கூட நீடிக்கவில்லை. ஏனென்றால் அந்த மெசேஜை நிறுவனம் ஏப்ரல் 1-ஆம் தேதி ட்விட் செய்திருந்தது தான். காரணம் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அல்லவா.? எனவே பல யூஸர்கள் ட்விட்டரின் அறிவிப்பில் மகிழ்ந்தாலும் அடுத்த நொடி இந்த அறிவிப்பு உண்மைதானா? அல்லது ஏப்ரல் ஃபூல் செய்வதற்கா என்று தெரியாமல் குழம்பி கமெண்ட்ஸில் கேட்க துவங்கினர்.



முட்டாள்கள் தின பிராங்கிற்காக இந்த ட்விட் வெளியிடப்பட்டதா என்பதை அறிய பிரபல fact-checking வெப்சைட்டான Snopes, ட்விட்டர் நிறுவனத்தை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தது. Snopes-ன் மெயிலுக்கு பதில் அளித்த ட்விட்டரின் செய்தி தொடர்பாளர் ஒருவர் "நாங்கள் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது. ஆனால் எங்கள் அறிக்கையை பின்னர் திருத்தலாம்" (We cannot confirm or deny but we may edit our statement later) என்று கூறி இருக்கிறார்.

Also Read : 'சைலன்ட்' ஆக இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 7 புதிய அம்சங்கள்!

ட்விட்டர் இந்த அம்சத்தை வெளியிடுமா என்பதை எங்களால் உறுதியாக கூற முடியவில்லை. ஏனெனில் நிறுவனம் எங்களுக்கு நேரடி பதிலை கொடுக்கவில்லை. எனினும் இது பற்றிய ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம் என்று Snopes கூறி இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரின் இந்த ட்விட் யூஸர்களிடையே வேடிக்கையான கருத்துக்களை பெற்றுள்ளது. ட்விட்டரில் இப்போது ஜோக்ஸ் வந்துள்ளது என்று ஒரு யூஸர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். பலர் ட்விட்டரின் மெசேஜை நம்பி இது தங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று, விரைவில் அறிமுகப்படுத்துங்கள்.. காத்திருக்கிறோம் என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Twitter

அடுத்த செய்தி