புதிய அப்டேட் வெளியிடும் ட்விட்டர்... பயனாளர்களிடம் கருத்துகேட்பு

புதிய கொள்கை மாற்றங்கள் ஏற்படலாம் என ட்விட்டர் சட்டப்பிரிவின் தலைவர் விஜயா கட்டே தெரிவித்துள்ளார்.

புதிய அப்டேட் வெளியிடும் ட்விட்டர்... பயனாளர்களிடம் கருத்துகேட்பு
ட்விட்டர்
  • News18
  • Last Updated: October 22, 2019, 5:34 PM IST
  • Share this:
போலி வீடியோக்களை தடுக்க புதிய அப்டேட் ஒன்றை வெளியிடத் தயாராகி வருகிறது ட்விட்டர்.

சமூக வலைதளத்தில் தனி ஒரு நபருக்கு ஆபத்து விளைவிக்கும் அல்லது மிரட்டல் விடுக்கும் வகையிலான போலி வீடியோக்களைக் கண்டறிந்து தடுக்க ட்விட்டர் முயற்சித்து வருகிறது.

ட்விட்டர் தொடர்ந்து வெளியிட உள்ள அப்டேட் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் ட்விட்டர் கோரிக்கை வைத்துள்ளது.


“Deepfakes” என்றழைக்கப்படும் போலியான வீடியோக்களைக் களையெடுப்பது தற்போது ட்விட்டருக்குப் பெரும் சவாலாக உள்ளது. வாடிக்கையாளர்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் தனது கொள்கை முடிவுகளையும் மறு பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. சிந்தடிக் மற்றும் மேனிப்புலேட் வீடியோ அனைத்தும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதற்கான கருத்துக்கணிப்பு காலத்தை பயனாளர்களுக்காக அறிவிக்க உள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடங்கப்படலாம்.

புதிய கொள்கை மாற்றங்கள் ஏற்படலாம் என ட்விட்டர் சட்டப்பிரிவின் தலைவர் விஜயா கட்டே தெரிவித்துள்ளார்.மேலும் பார்க்க: ஸ்மார்ட்போன் பயன்படுத்தி ’போர்’ அடிக்கிறதா..?- நாஸ்டாலஜிக் மாற்றம் தரும் நோக்கியா

RED அலர்ட் என்பது என்ன?
First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்