Home /News /technology /

இனி டிவீட்களை எடிட் செய்யலாம்.. எப்படி எப்போது என்று தெரியுமா?

இனி டிவீட்களை எடிட் செய்யலாம்.. எப்படி எப்போது என்று தெரியுமா?

ட்விட்டர்

ட்விட்டர்

Edit Option in Twitter| இடுகை வெளியிடப்பட்டு 30 நிமிடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். - ட்விட்டர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
குறைந்த வார்த்தைகளில் மக்கள் தங்கள் எண்ணங்களை உலகிற்கு சொல்லும் தளமாக ட்விட்டர் இயங்கி வருகிறது. படம், வீடியோ , தள இணைப்பு , போகிறாள் என்று அனைத்துவிதமான வசதிகளையும் தந்து வருகிறது. அதன் நீட்சியாக பயனர்கள் தங்கள் டிவீட்கட்ளை எடிட் செய்யவும் புதிய ஒரு வசதியாய் வழங்க உள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று எல்லா தளங்களும் தங்கள் இடுகையில் ஏதேனும் பிழை இருந்தால் அதைத் திருத்திகொள்ள வாய்ப்பளிக்கிறது. ஆனால் ட்விட்டரில் இது வரை அப்படி ஒரு வசதி கொடுக்கப்படவில்லை. பிழை இருந்தால் அதை அழித்துவிட்டு வேறு ஒரு புதிய ட்வீட் தான் போட வேண்டும்.

ஒரு எழுத்து பிழை என்றாலும் அதை முழுதும் அழித்துவிட்டு மீண்டும் இடுகையிடவேண்டும். இதனால் ட்விட்டரின் பயனர்கள் பலர் பிழையைத் திருத்தும் வசதியைக் கொண்டு வர கோரிக்கை வைத்தனர். அது இப்போது சாத்தியமாக உள்ளது.



எப்போது தொடங்குகிறது?

ட்விட்டரின் இந்த சேவையானது இப்போது டெஸ்டிங் நிலையில் உள்ளது. குறிப்பிட்ட சில பயனாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த திருத்தும் வசதியை அடுத்த மாதத்திற்குள் ட்விட்டர் வழங்க உள்ளது.

இந்த பயனாளர்கள் சோதனை மூலம், இந்த வசதியால் ஏற்படும் சிரமம், இந்த வசதியை மேம்படுத்தும் வழிகள், துஷ்ப்ரயோக வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து, அதை சரி செய்து பின்னர்  அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.

இப்போது நானும் டெஸ்டிங்கில் சேரலாமா?

தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது. இந்திய பயனாளர்களுக்கு இந்த வசதி வந்து சேர சிறிது காலம் ஆகும்.

விந்து மற்றும் முட்டை இன்றி உருவாக்கப்பட்ட செயற்கை கரு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு

எப்போது எடிட் செய்யலாம்:
முதற்கட்டமாக ஒரு இடுகை , வெளியிடப்பட்டு 30 நிமிடத்திற்குள் அதை எடிட் செய்ய /திருத்த வாய்ப்பளிக்கிறது. அந்த 30 நிமிடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். ஆனால் அதன் பின்னர் செய்ய முடியாது.

எடிட் செய்தது தெரியுமா?

முதன்மையான ஒரிஜினல் இடுகைக்கும் திருத்தப்பட்ட இடுகைக்கு வித்தியாசம் தெரிய இடுகையின் கீழே 'திருத்தப்பட்ட பதிவு' என்று வரும். அதை சொடுக்கினால், முதலில் போட்ட ஒரிஜினல் பதிவு மற்றும் திருத்தப்பட்ட எல்லா நிலைகளும் திருத்தப்பட்ட காலத்தோடு வெளிப்படும்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Features, New updates, Twitter

அடுத்த செய்தி