ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ட்விட்டர் பணியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம்: வழக்கு பாய்கிறது

ட்விட்டர் பணியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம்: வழக்கு பாய்கிறது

டிவிட்டர்

டிவிட்டர்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியவுடன் எதிர்பார்த்தது போலவே பல்வேறு பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்கி உள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, Indiasan franciscosan francisco

  எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியவுடன் எதிர்பார்த்தது போலவே பல்வேறு பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்கி உள்ளார்.

  கடந்த ஏப்ரல் மாதமே டிவிட்டரை வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பல்வேறு சட்ட சிக்கல்களால் அதனை வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு சமீபத்தில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக தன்வசப்படுத்தியுள்ளார்.

  டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே முதற்கட்டமாக அதன் சி.இ.ஒ மற்றும் இயக்குனரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இது மட்டுமல்லாமல் ஒருவேளை எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கினால் பல்வேறு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தகவல் கடந்த சில மாதங்களாகவே தீயாக பரவி வந்தது.

  அதை உண்மையாக்கும் வகையில், டிவிட்டரை கையகப்படுத்திய சில நாட்களே ஆன நிலையில், டிவிட்டர் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளார். இவ்வாறு முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்வது சட்ட விதிகளுக்கு புறம்பானதாக இருப்பதாகவும், அவர்களுக்கு சேர வேண்டிய எந்தவித இழப்பீடு தொகையும் கொடுக்கப்படவில்லை என்றும் டிவிட்டர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

  முன்னறிவிப்பின்றி பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதற்காகவும் அதற்குரிய இழப்பீடு எதுவும் கொடுக்கப்படாமல் இருந்ததற்காகவும் டிவிட்டர் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, வழக்கு தொடுக்கப்பட்டது.

  அமெரிக்காவின் பணியாளர்களுக்கான விதிமுறையின் படியும் கலிபோர்னிய மாகாணத்தில் உள்ள சட்ட விதிகளின்படியும் டிவிட்டர் நிறுவனம் செயல்படவில்லை. ஒரு பணியாளரை பணியை விட்டு நீக்குவதற்கு 60 நாட்களுக்கு முன்னதாக அவர்களுக்கு எழுத்து வடிவில் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது அங்குள்ள சட்டம். ஆனால் டிவிட்டர் நிறுவனம் இது எதையுமே பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  டிவிட்டர் ஒப்பந்தம் நஷ்டமா? டெஸ்லா பங்குகளை அதிரடியாக விற்ற எலான் மஸ்க்!

  “நவம்பர் 4 ஆம் தேதி அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு பணியாளர்களை டிவிட்டர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனால் இதைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் கலிபோர்னியாவின் வேலைவாய்ப்பு துறைக்கு தெரிவிக்கப்படவில்லை” என்று அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் கலிபோர்னியாவின் “வார்ன் ஆக்ட்” எனப்படும் சட்ட விதிகளை டிவிட்டர் மீறியதற்காகவும், அதனை குற்றவாளியாக அறிவிக்கும் படி வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தகுந்த சன்மானத்துடன் கூடிய இழப்பீடு, வழக்கிற்கான செலவு, டிவிட்டர் மற்றும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணியாளர்களுக்கு சேர வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பணி நீக்கத்தை தொடங்கிய மெட்டா- கலக்கத்தில் ஊழியர்கள்

   மேலும் டிவிட்டரின் விதிமுறைகளிலேயே ஒரு பணியாளரை வேலையை விட்டு நீக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 60 நாட்களுக்கு உண்டான சம்பளம் மற்றும் அவர்களுக்குரிய இழுப்பீடுத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பின்பு விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி யாருக்கும் எந்தவித சன்மானம் மற்றும் இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Elon Musk, Twitter