ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ட்விட்டரில் இனி இந்த தொல்லை இருக்காது.. வருகிறது புது அப்டேட்...!!

ட்விட்டரில் இனி இந்த தொல்லை இருக்காது.. வருகிறது புது அப்டேட்...!!

ட்விட்டர்

ட்விட்டர்

Twitter | ட்விட்டர் சமீபத்தில் சைபர் புல்லியிங் என்று கூறப்படும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு பிரைவசி, அதாவது பாதுகாப்பு அம்சத்தை சமீபத்தில் மேம்படுத்தி இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை என்று கூறலாம். ஒரு பக்கம் பரபரப்பான செய்திகள் வைரலாக பகிரப்பட்டாலும், மற்றொரு பக்கம் ட்விட்டரின் புதிய அம்சங்கள், மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் ஆகியவையும் தவறாமல் இடம்பெற்று வருகிறது.

ட்விட்டர் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களை இயக்கி வரும் நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்று எல்லா நிறுவனங்களுமே யூசர்களின் பாதுகாப்பு மற்றும் பிரைவசியை முன்னிலைப்படுத்தி பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ட்விட்டர் சமீபத்தில் சைபர் புல்லிங் என்று கூறப்படும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு பிரைவசி, அதாவது பாதுகாப்பு அம்சத்தை சமீபத்தில் மேம்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அம்சம் தற்போது பரிசோதனையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் ட்விட்டர் என்று எல்லா சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் மற்றவரை உங்களுடைய பதிவில் அல்லது கமென்ட்டில் குறிப்பிட முடியும். அதாவது உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி tagging என்ற ஒரு ஆப்ஷன் மூலம் நீங்கள் மற்றவரை பதிவில் குறிப்பிட முடியும். இது யூஸர்களுக்கும் பொருந்தும், குழுக்களுக்கும் பொருந்தும் மற்றும் பிசினஸ் பேஜ் என்று கூறப்படும் வணிகங்களுக்கும் பொருந்தும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சமூக வலைத்தள கணக்குகளில் குறிப்பிடலாம் என்ற நிலை, ஒரு குறிப்பிட்ட நபரின் தனியுரிமையை பாதிக்கக்கூடும். எனவே ட்விட்டர் இதனை பரிசீலனை செய்து உங்கள் கணக்கை ட்விட்டரில் யாரெல்லாம் குறிப்பிட முடியும் என்ற ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒரு ட்வீட் என்றாலும் சரி அல்லது ஒரு ட்வீட்டின் திரெட் ஆக இருந்தாலும் சரி, யார் உங்களை அதில் டேக் செய்யலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யும் அளவுக்கு உங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. நீங்கள் அனுமதிக்கும் நபர்கள் மட்டுமே உங்களுடைய ட்விட்டர் கணக்கை பதிவில் அல்லது கமென்ட்டில் குறிப்பிட முடியும். நீங்கள் அனுமதிக்காதவர்கள் அவ்வாறு செய்ய இயலாது.

Also Read : இந்த ஆப்களால் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டிற்கு ஆபத்து - மெட்டா எச்சரிக்கை

தற்போது இருக்கும் இந்த டேக்கிங் அமைப்புகளின்படி, நீங்கள் ப்ளாக் செய்த நபர்களை தவிர ட்விட்டரில் யார் வேண்டுமானாலும் @ என்ற இந்த சிம்பலை பயன்படுத்தி உங்களை குறிப்பிட முடியும்.

வரப்போகும் புதிய அம்சத்தில் நீங்கள் இரண்டு விதமாக tag ஆப்ஷனை பயன்படுத்தலாம். முதலாவதாக மேலே கூறியுள்ளது போல ட்விட்டர் பயன்படுத்தும் அனைவருமே உங்களை tag செய்ய முடியும்.

இரண்டாவதாக நீங்கள் பின்பற்றும் நபர்கள் மட்டுமே உங்களை tag செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை நீங்கள் அமல்படுத்தலாம். ட்விட்டரில் ஒரு நபரை டேக் செய்வதற்கு @ என்ற சிம்பலை பயன்படுத்தி அந்த ட்விட்டர் ஹேண்டில் என்று கூறப்படும் பெயரையோ அல்லது யூசரின் பெயரையோ உள்ளிட்டால் ட்விட்டர் கணக்கு tag செய்யப்படும்.

Also Read : எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!

ஒரு சில ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக வைத்திருப்பார்கள் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ரகசியமாக, குறிகிய வட்டாரத்தில் இயங்கி வருவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவ்வாறு இருக்கும் பொழுது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இதுவரை யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட முடியும் என்ற அம்சம் கட்டுப்படுத்தப்படுவது இணையதளத்தில் கேலிக்கும் நையாண்டிக்கும் உள்ளாக்கப்படும் சம்பவங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Technology, Twitter