ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பணம் செலுத்தி ப்ளூ-டிக் பெறும் திட்டத்தை நிறுத்தியுள்ள ட்விட்டர் - என்ன காரணம்.?

பணம் செலுத்தி ப்ளூ-டிக் பெறும் திட்டத்தை நிறுத்தியுள்ள ட்விட்டர் - என்ன காரணம்.?

ட்விட்டர் ப்ளூ-டிக்

ட்விட்டர் ப்ளூ-டிக்

Twitter | ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதலே தினந்தோறும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டுள்ளது. ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது முதல் வெரிஃபைடு கணக்குகளுக்கு 8 டாலர் சந்தா செலுத்த வேண்டும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தது வரை பல்வேறு எதிர்பாராத சம்பவங்களை செய்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

8 டாலர் செலுத்தும் எவர் வேண்டுமானாலும் வெரிஃபைடு அக்கவுண்ட்ஸ் எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக்கை அவர்களது கணக்கிற்கு பெற முடியும் என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதலே தினந்தோறும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டுள்ளது. ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது முதல் வெரிஃபைடு கணக்குகளுக்கு 8 டாலர் சந்தா செலுத்த வேண்டும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தது வரை பல்வேறு எதிர்பாராத சம்பவங்களை செய்து வருகிறார். ஒருபுறம் இந்த 8 டாலர் முறைக்கு ஆதரவு இருக்க, மற்றொரு புறம் பலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இவை எல்லாவற்றிற்கும் ”எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளுங்கள், ஆனால் அதற்கு முன் 8 டாலர் செலுத்தி விடுங்கள்” என்று ஒற்றை வரியில் விளக்கம் அளித்து விட்டு கெத்து காட்டினார் மஸ்க்.

ஆனால் தற்போது திடீரென்று எட்டு டாலர் செலுத்தி ப்ளூ-டிக் பெரும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் 8 டாலர் செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற முத்திரையை பெற முடியும் என்பதால், பல போலி நபர்கள் உண்மையான பிரபலங்களின் பெயரிலும், நிறுவனங்களின் பெயரிலும் கணக்குகளை துவங்கி 8 டாலர் செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளாக உருவாக்கி வருகின்றனர்.

உதாரணத்திற்கு பிரபல கேமிங் நிறுவனமான “நிண்டண்டோ இன்க்” நிறுவனத்தின் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு ஒன்றை துவங்கிய ஒரு நபர், பிரபல வீடியோ கேம் கதாபாத்திரமான “சூப்பர் மாரியோ (Super Mario)” நடுவிரலை காண்பிக்கும் ஒரு படத்தை பதிவேற்றியுள்ளார்.

Also Read : இன்ஸ்டாவில் ரீல்ஸ் ரொம்ப தொந்தரவா இருக்கா..? போட்டோ மட்டும் பார்க்கணுமா? இந்த ஆப்ஸ் யூஸ் பண்ணுங்க..

மற்றொரு நபரோ மிகப்பெரும் ஃபார்மா நிறுவனமான “எலி லில்லி ஆண்டு கோ” என்ற நிறுவனத்தின் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை துவங்கி, “இன்று முதல் இன்சுலின் இலவசம்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அந்த நிறுவனம் உண்மையாகவே தனது மன்னிப்பை வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து, அது நாங்கள் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க அந்தந்த நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் உண்மையான அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு “Official” எனப்படும் பேட்ச் வழங்கப்படும் எனவும், இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது எனவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற போலி கணக்குகளை கண்டறிந்து அவற்றின் பெயரில் “பரோடி (parody)” என்ற பேட்ச் வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Also Read : ட்விட்டருக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் டாப் 5 ஆப்ஸ்கள்!

நன்றாக நடந்து கொண்டிருந்த ட்விட்டர் வியாபாரத்தில் இப்படி பிரச்சனைகள் ஏற்பட காரணமான எலான் மஸ்கின் தலைமையின் கீழ் பணிபுரிய விருப்பமின்றி அந்நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் தங்களது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துள்ளனர். மேலும் ட்விட்டரின் மீது எற்பட்டுள்ள அதிருப்தியால், விளம்பரங்களின் மூலம் வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Elon Musk, Tamil News, Technology, Twitter