'டவுன்வோட்' ட்விட்டரில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

ட்விட்டர்

டவுன்வோட்ஸ் ரியாக்சன் வெறுப்புகளை காண்பிப்பது அல்ல என்றும் வோட் பட்டன்கள் ஒருவரது ரிப்லைகளின் வரிசையை மாற்றாது என்றும் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 • Share this:
  ட்விட்டர் ஒரு புதிய “டவுன்வோட்” பட்டனை சேர்ப்பது குறித்த சோதனையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது சாதாரணமாக இருக்கும் "டிஸ்லைக்" பட்டன் அல்ல என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட iOS பயனர்களின் உரையாடலில் தொடர்புடைய பதில்களின் வகைகளைப் புரிந்துகொள்வதற்காக இந்த அம்சத்தை சோதித்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த புதிய பட்டனின் இறுதி வெளியீட்டை விரைவில் தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

  ஒருவரது ட்விட்டர் கணக்கின் நியூஸ் ஃபீட்டில் தோன்றும் எந்தஒரு பதிவுகளிலும், கமெண்ட் செக்சன் பட்டன், ரீட்வீட் பட்டன் மற்றும் ஒரு ஹார்டின் பட்டன் ஆகியவை இருக்கும். இருப்பினும், தற்போது புதிதாக சோதனை செய்து வரும் அம்சத்தின் அடிப்படையில் ஒரு டீவீட்டிற்கான ரியாக்சன்கள் முறையே மேல் மற்றும் கீழ் கட்டைவிரல்களால் குறிப்பிடப்படும். அதாவது லைக் மற்றும் டவுன்வோட் ஆகிய இரண்டு புதிய விருப்பங்கள் ஹார்டின் ரியாக்ஷன் பட்டன் வரிசையில் இணைய உள்ளன.  ஏதேனும் விருப்பமில்லாத பதிவுகள் அல்லது பதில்களுக்கு டவுன்வோட் ரியாக்க்ஷன்கள் மூலம் விருப்பத்தை வெளிப்படுத்த இதே டவுன்வோட் பட்டனை பேஸ்புக் நிறுவனம் நீண்ட காலத்திற்கு முன்பே சோதனை செய்தது. ஆனால் பல ஈமோஜிகள் ரியாக்ஷன்களாக சேர்த்திருந்தால், நிறுவனம் இன்னும் அந்த விருப்பத்தை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  வீடியோ நிறுவனமான யூடியூப், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்களை வழங்கி வருகிறது. சுவாரஸ்யமாக, ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான யூடியூப் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் தளத்தில் இருந்த டிஸ்லைக் விருப்பத்தின் எண்ணிக்கையை சோதிக்கத் தொடங்கியது.

  Also Read : வாட்ஸ்அப் புதிய அப்டேட் அறிமுகம்... குரூப் வீடியோ காலில் ஜாலியாக பேசலாம்!

  ஆனால் அந்த விருப்பத்தை முழுவதுமாக அகற்றவில்லை. புதிய ரியாக்ஷன் விருப்பம் குறித்து பேசிய ட்விட்டர் நிறுவனம், டவுன்வோட்கள் இன்னும் பொது பயன்பாட்டிற்கு வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. மேலும் அப்வோட் அதாவது லைக் பட்டன் ரியாக்ஷனில் விருப்பங்களாகக் காட்டப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த விருப்பம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் எப்போது சோதனை செய்யப்படும் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

  இதுதவிர டவுன்வோட்ஸ் ரியாக்சன் வெறுப்புகளை காண்பிப்பது அல்ல என்றும் வோட் பட்டன்கள் ஒருவரது ரிப்லைகளின் வரிசையை மாற்றாது என்றும் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும் நிறுவனம் டவுன்வோட் (அல்லது விரும்பாத) விருப்பத்தின் எண்ணிக்கையை வெளிப்படையாக காட்டாது என்பதும் தெரிகிறது.

  இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, “இது டிஸ்லைக் பட்டனை போன்றது அல்ல. இந்த ஆராய்ச்சி சோதனையில், கட்டைவிரல் ஐகான் என்பது ஒரு வாக்கெடுப்பு ஆகும். எனவே டவுன்வோட் பட்டன், ஒரு உரையாடலுக்கு யூசர் அளிக்கும் பதில் பொருத்தமானதாக இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கிறது.

  நீங்கள் செய்யும் பதில்களின் வகைகளை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள விரும்புகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளது. டவுன்வோட் பட்டனைகள் பப்ளிக் செய்யப்படவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியது. மேலும் உங்கள் பதிலை யாராவது குறைத்து மதிப்பிட்டால் அது எந்த ஒரு யூசருக்கும் அறிவிக்கப்படாது. உங்கள் பதிலுக்கு அப்வோட் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது உங்களுக்கு அறிவிக்கப்படும், மற்றும் பதில் அவர்களின் விருப்பங்கள் தாவலில் காண்பிக்கப்படும்" என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: