Home /News /technology /

முடங்கியதா ட்விட்டர்? வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர் முடக்கம்?

முடங்கியதா ட்விட்டர்? வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர் முடக்கம்?

Twitter

Twitter

இன்று அதிகாலை இந்தியாவிலும் கூட பலருக்கும் ட்விட்டர் சேவை முடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியா உட்பட சில பயனர்களுக்கு ட்விட்டர் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் உலக அளவில் பிரபலமான சமூக வலைத்தளங்கள் என பெயரெடுத்தவை. இந்த வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உணவருந்துவம் நேரங்களில் கூட மொபைலை கையில் வைத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் உலவும் பழக்கத்திற்கு பலரும் அடிமைகளாக கூட மாறிவிட்டனர்.

இந்த நேரத்தில் தான் கடந்த வாரம் திடீரென ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் திடீரென முடங்கின. ஆரம்பத்தில் ஏதோ சிறிய கோளாறு என்றே நெட்டிசன்கள் நினைத்திருந்தனர், ஆனால் பல மணி நேரங்கள் இந்த வலைத்தளங்கள் முடங்கி கிடந்தன. தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்ட பல மணி நேர முடக்கத்துக்கு பின்னரே இந்த வலைத்தளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் ஃபேஸ்புக் நிறுவனமும் இந்த முடக்கத்துக்காக பயனர்களிடம் மன்னிப்பு கோரியது. திடீரென இந்த தளங்கள் முடங்கியதால் தகவல் பரிமாற்றத்துக்கு வழியில்லாமல் ஸ்தம்பித்து போயினர். ஆயினும் அந்த நேரத்தில் பலருக்கும் கைகொடுத்தது ட்விட்டர் மட்டும் தான்.

Also read:  ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மரணத்துக்கு காரணமான ரசாயனம் – ஒரு ஷாக் ரிப்போர்ட்!

இதனைத் தொடர்ந்து நேற்று திடீரென ஜிமெயில் முடங்கியது. பலரும் மெயில்கள் அனுப்ப முடியாமல் திணறலை சந்தித்தனர். முக்கிய சமூக வலைத்தளங்கள் முடங்கியது பயனர்களுக்கு சிரமத்தை தந்த நிலையில் இன்று அடுத்த அதிர்ச்சியாக ட்விட்டர் சேவையும் முடங்கியிருக்கிறது.

இன்று அதிகாலை இந்தியாவிலும் கூட பலருக்கும் ட்விட்டர் சேவை முடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. டவுண்டிடெக்டர் எனும் இணைய பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இன்று சுமார் 450க்கும் மேற்பட்டோருக்கு ட்விட்டர் முடங்கியதாகவும், இது தொடர்பாக புகார் எழுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:   வீர சாவர்கர் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்!

அதன்படி புகார் அளித்தவர்களில் 55% பேர் வெப்சைட்டில் பிரச்னை என்றும், 33% பேர் ஆப்பில் பிரச்னை என்றும், 11 சதவீதத்தினர் சர்வர் கோளாறு எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

 
Published by:Arun
First published:

Tags: Social media, Technology, Twitter

அடுத்த செய்தி