ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நீண்ட நாள் எதிர்பார்ப்பு! ட்விட்டரில் வைரலாகும் ட்விட்டர் பற்றிய ட்வீட் – அப்படி என்ன ஸ்பெஷல்?

நீண்ட நாள் எதிர்பார்ப்பு! ட்விட்டரில் வைரலாகும் ட்விட்டர் பற்றிய ட்வீட் – அப்படி என்ன ஸ்பெஷல்?

ட்விட்டர்

ட்விட்டர்

இந்த எடிட் அம்சம் ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Internationa | americaamericaamerica

  சர்ச்சைகள், புகார்கள் என்று டிவிட்டர் பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு குறைவே இல்லை. ஆனால், ஒரு சில புதிய அம்சங்கள் பற்றி தகவல் வெளியாகும் போதும் டிவிட்டர் பற்றிய செய்தி டிவிட்டரிலேயே வைரலாகும். ட்விட்டரில் எடிட் செய்யும் அம்சம் வரப்போகிறது என்று சில வாரங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. பல யூசர்களும் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்த ட்விட்டரில் பதிவுகளை ‘எடிட்’ செய்யும் அம்சம் வெளியிட இருப்பதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமான செய்தி இப்போது உண்மையாகியுள்ளது.

  எடிட் செய்யப்பட்ட முதல் ட்வீட், டிவிட்டர் ப்ளூவில் வெளியாகி அது எடிட் செய்த வரலாற்றுடன் தற்போது காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த எடிட் செய்யப்பட்ட முதல் டிவீட், ட்விட்டரிலேயே நெட்டிசன்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  டிவிட்டரில் ஒரு பதிவை டிவீட் செய்த பின்பு அதைத் திருத்த முடியாது. டிவிட்டர் யூசர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பதிவுகளை திருத்தும் விருப்பத்தை ட்விட்டர் வழங்கவே இல்லை. எடிட் ஆப்சன் சேர்க்கலாமா வேண்டாமா என்று ஒரு கருத்துக்கணிப்பும் நடந்தது. அதற்கு டிவிட்டர் இரண்டு தரப்பாக பிரிந்து விவாதித்தது. ஆனால், எடிட் அம்சம் கட்டாயம் சேர்க்கப்படும் என்பது உறுதி செய்ததோடு, அதை சோதிக்கும் முயற்சியிலும் டிவிட்டர் இறங்கியுள்ளது.

  சில நாட்களுக்கு முன்பே, ஒரு டிவீட் எடிட் செய்யப்பட்டது என்று பார்த்தால் அந்த கணக்கில் எடிட் அம்சம் இருக்கிறது என்று அர்த்தம். தற்போது இந்த விருப்பத்தை டெஸ்ட் செய்து வருகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்திருந்தது. எடிட் அம்சத்தில், ஒரு டிவீட் கடைசியாக எடிட் செய்யப்பட்டது என்ற ஒரு லேபிளுடன் ஒரு பென்சில் ஐகான் காணப்படும். அதாவது ஒரு பதிவு எப்பொழுது எடிட் செய்யப்பட்டது எந்த விவரம் அதில் குறிப்பிட்டு இருக்கும் என்று கூறியிருந்தது.

  https://twitter.com/TwitterBlue/status/1575590534529556480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575590534529556480%7Ctwgr%5Ee5a841e7a4f2ee05ca8a8366564bd0d751a835db%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Ftwitter-sends-out-first-edited-tweet-and-users-cant-keep-calm-6068209.html

  இந்த எடிட் அம்சம் அனைத்து யூசர்களுக்கும் தற்பொழுது அறிமுகம் செய்யப்படவில்லை. கட்டணம் செலுத்தும் யூசர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக ட்விட்டர் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

  இந்த எடிட் அம்சம் ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ட்விட்டர் ப்ளூவிற்கு பணம் செலுத்தி ட்விட்டரை பயன்படுத்தி வரும் யூசர்களுக்கு இந்த ஆப்ஷன் தற்பொழுது கிடைக்கும் என்பதை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பலரும் ட்விட்டருக்கு பணம் செலுத்தி எடிட் ஆப்ஷனை பெற வேண்டுமென்ற அவசியமில்லை என்பதையும் கருத்தில் கொண்டுள்ளதால், இது ட்விட்டர் ப்ளூவிற்கான பிரத்யேகமான ஒரு அம்சமாக இருக்கலாம் என்பதையும் ட்விட்டர் யோசித்து வருகிறது.

  முதல் முதலாக எடிட் செய்யப்பட்ட ட்வீட்டை பார்த்தவுடன் யூசர்கள் மத்தியில் மகிழ்ச்சி தாங்கவில்லை. எத்தனை ஆண்டுகள் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் வேண்டும் என்பதை கேட்டு இருக்கிறோம் என்று யூசர்கள் தங்களுடைய கருத்தை கமெண்ட் ஆகவும், ரீட்வீட் செய்தும் பதிவு செய்து வருகின்றனர்.

  ஒரு யூசர் இது எண்ட் கேம் என்று வேடிக்கையாக டிவீட் செய்துள்ளார்.

  சிலர், இனியாவது என்னுடைய எழுத்துப்பிழையை சரி செய்யும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

  பணம் கட்டி பயன்படுத்தும் அம்சமாக இருந்தாலுமே, இது வரவேற்கத்தக்கது என்று சிலர் கூறியுள்ளனர். எடிட் ஹிஸ்டரியை பார்ப்பதற்காகவே இந்த அம்சம் வைக்கப்பட்டுள்ளதா என்று நையாண்டி செய்யும் தொணியிலும் டிவீட்கள் உள்ளன.

  டிவிட்டரில் ‘திருத்தும்’ அம்சம் தேவைப்படுபவர்கள், மாதா மாதம் $4.99 கட்டணம் செலுத்த வேண்டும்; தோராயமாக இந்திய மதிப்பில் 400 ரூபாய் ஆகும்.

  Published by:Salanraj R
  First published: