Twitter Fleets | Voice Tweet | உலகளவில் பயன்பாட்டிற்கு வருகிறது ட்விட்டர் ஃபிளீட்ஸ்.. விரைவில் அறிமுகமாகும் வாய்ஸ் ட்வீட்..
ட்விட்டர் வாய்ஸ் ட்வீட் அம்சம் ஆண்ட்ராய்டுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது வெளியாகும் என்ற சரியான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

விரைவில் அறிமுகமாகும் வாய்ஸ் ட்வீட்
- News18
- Last Updated: November 19, 2020, 3:43 PM IST
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்விட்டர் ஃபிளீட்ஸ் இப்போது உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்துள்ளனர். ஸ்னாப்சாட்டால் ஈர்க்கப்பட்ட இந்த அம்சம், பயனர்களை புகைப்படங்கள், ட்வீட் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை ஒரு தனி திரையில் பதிவிட அனுமதிக்கிறது. மேலும் அந்த பதிவுகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும். ஸ்னாப்சாட் தளத்தில் பதிவிடப்படும் ஸ்டோரிஸ் 24 மணி நேரத்தில் தானாகவே மறைய செய்யும் அம்சத்தை வழங்கி வருகிறது.
இதனை அடிப்படையாக கொண்டு ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஃபிளீட்ஸ் என அழைக்கப்படும் புதிய அம்சம் கடந்த மார்ச் மாதம் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் உள்ள ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் ட்விட்டர் பயனர்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு இந்த அம்சத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற நாடுகளிலும் வழங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.
அந்த வகையில் தற்போது உலகநாடுகள் அனைத்திலும் உள்ள ட்விட்டர் பயனர்கள் இந்த அம்சத்தை இனி பெறலாம். கூடுதலாக, ட்விட்டரில் வாய்ஸ் அடிப்படையிலான உரையாடலை நடத்த 'ஸ்பேஸ்' என பெயரிடப்பட்ட புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. சோதனை செய்வதற்காக வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த அம்சம் தற்போது கிடைக்கும் என்றும் ஆனால் உலகளவில் இதன் வெளியீடு எப்போது வரும் என்று தெரியவில்லை. ஃபிளீட்ஸ் அப்டேட் குறித்து தனது வலைதளத்தில் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது, இந்த அம்சம் தற்காலிக எண்ணங்களை பகிர்வதற்கானவை என்றும் அவை 24 மணிநேரம் இருப்பதால் ஒரு புதிய உரையாடல்களைத் தொடங்க உதவுகின்றன என்றும் விளக்கியுள்ளது. பிரேசில், இத்தாலி, இந்தியா மற்றும் தென் கொரியாவில் இதன் சோதனைகள் மூலம், ஃப்ளீட்ஸ் பயனர்கள் உரையாடலில் சேர மிகவும் வசதியாக உணர்ந்ததை நாங்கள் அறிந்தோம். மேலும் ஃப்ளீட்ஸ் உள்ளவர்கள் ட்விட்டரில் அதிகம் பேசுவதை நாங்கள் கண்டோம்.
ட்விட்டரில் புதிதாக சேர்ந்தவர்கள், ஃப்ளீட்ஸ் மூலம் தங்கள் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதற்கான எளிதான வழியாகும். ஏனென்றால் அவை ஒரு நாளுக்குப் பிறகு நம் பார்வையில் இருந்து மறைந்துவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வெப் கிளையண்டில் ஃப்ளீட்டின் வருகை குறித்து ட்விட்டர் நிறுவனம் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ட்விட்டர் ஃப்ளீட்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது.
தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான பயன்பாட்டில் கிடைக்கிறது. ட்விட்டர் ஃப்ளீட்சில் பதிவேற்ற, பயனர்கள் பயன்பாட்டுத் திரையின் மேல் இடது மூலையில் இருக்கும் '+' அடையாளத்தைக் கிளிக் செய்ய வேண்டும். ஸ்னாப்சாட், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் ஸ்டோரிஸ் எவ்வாறு பதிவிடப்படுகிறதோ அதுபோலவே உரைகள், புகைப்படம், ஜிஃப் ஆகியவற்றை நீங்கள் அதில் சேர்க்கலாம். இப்போது லிங்க்ட்இனில் கூட ஸ்டோரிஸ் பதிவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ட்விட்டர் ஸ்பேஸ் வாய்ஸ் சேட்ரூம் அம்சத்தை பற்றி தயாரிப்பு வடிவமைப்பாளர் மாயா பேட்டர்சன் கூறுகையில், இந்த அம்சம் நெருக்கமான உரையாடல்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதாகும் என தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் பகிர்ந்த புகைப்படத்தின் அடிப்படையில், ஸ்பேஸ் அம்சத்தில் பல பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம். மேலும் பயனர்களை உரையாடலின் ஒரு பகுதியாக இருக்குமாறு கோரலாம்.
Also read... Google Photosல் இருந்து புகைப்படங்களை சேமிப்பது, பதிவிறக்குவது எப்படி?
மேலும் சாட்ரூமில் யார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதையும் யார் பேசுகிறார்கள் என்பதையும் எந்த நேரத்திலும் பயனர்கள் பார்க்க முடியும். இந்த அம்சம் கிளப்ஹவுஸிலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், ட்விட்டர் ஆப் உள்ளடக்க சவால்களுக்கு உட்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்பேஸ் அம்சம் மிகச் சிறிய நபர்களுக்கு மட்டும் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.
விகிதாசாரமாக பாதிக்கப்படுபவர்கள் அதாவது, ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மக்களுக்கு இந்த அம்சம் முதலில் கிடைக்க உள்ளது. அதேபோல ட்விட்டர் வாய்ஸ் ட்வீட் அம்சம் ஆண்ட்ராய்டுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது வெளியாகும் என்ற சரியான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. நிறுவனம் முதலில் கடந்த ஜூன் மாதத்தில் வாய்ஸ் ட்வீட்களை முன்னிலைப்படுத்தியது. இந்த அம்சத்தில் பயனர்கள் 140 விநாடிகள் ஆடியோவைப் ரெகார்ட் செய்து அதை ஒரு ட்வீட்டில் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஃபிளீட்ஸ் என அழைக்கப்படும் புதிய அம்சம் கடந்த மார்ச் மாதம் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் உள்ள ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் ட்விட்டர் பயனர்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு இந்த அம்சத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற நாடுகளிலும் வழங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.
அந்த வகையில் தற்போது உலகநாடுகள் அனைத்திலும் உள்ள ட்விட்டர் பயனர்கள் இந்த அம்சத்தை இனி பெறலாம். கூடுதலாக, ட்விட்டரில் வாய்ஸ் அடிப்படையிலான உரையாடலை நடத்த 'ஸ்பேஸ்' என பெயரிடப்பட்ட புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. சோதனை செய்வதற்காக வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த அம்சம் தற்போது கிடைக்கும் என்றும் ஆனால் உலகளவில் இதன் வெளியீடு எப்போது வரும் என்று தெரியவில்லை.
ட்விட்டரில் புதிதாக சேர்ந்தவர்கள், ஃப்ளீட்ஸ் மூலம் தங்கள் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதற்கான எளிதான வழியாகும். ஏனென்றால் அவை ஒரு நாளுக்குப் பிறகு நம் பார்வையில் இருந்து மறைந்துவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வெப் கிளையண்டில் ஃப்ளீட்டின் வருகை குறித்து ட்விட்டர் நிறுவனம் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ட்விட்டர் ஃப்ளீட்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது.
தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான பயன்பாட்டில் கிடைக்கிறது. ட்விட்டர் ஃப்ளீட்சில் பதிவேற்ற, பயனர்கள் பயன்பாட்டுத் திரையின் மேல் இடது மூலையில் இருக்கும் '+' அடையாளத்தைக் கிளிக் செய்ய வேண்டும். ஸ்னாப்சாட், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் ஸ்டோரிஸ் எவ்வாறு பதிவிடப்படுகிறதோ அதுபோலவே உரைகள், புகைப்படம், ஜிஃப் ஆகியவற்றை நீங்கள் அதில் சேர்க்கலாம். இப்போது லிங்க்ட்இனில் கூட ஸ்டோரிஸ் பதிவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
That thing you didn’t Tweet but wanted to but didn’t but got so close but then were like nah.
We have a place for that now—Fleets!
Rolling out to everyone starting today. pic.twitter.com/auQAHXZMfH
— Twitter (@Twitter) November 17, 2020