டிவிட்டரில் வரவுள்ள புதிய சிறப்பம்சம் என்ன தெரியுமா?
டிவிட்டரில் வரவுள்ள புதிய சிறப்பம்சம் என்ன தெரியுமா?
டிவிட்டரில் வரவுள்ள புதிய சிறப்பம்சம்
எல்லா சமூக வலைத்தளங்களை போலவே இதிலும் அதிக நேரத்தை செலவிடுவதற்கு ஒரு கூட்டமே உள்ளது. இந்த டிவிட்டரில் கருத்து சார்ந்த சண்டைகளை அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் பெரிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அந்த நபரின் சமூக வலைதள கணக்கை சற்று நோக்கினால் போதும். அதில் அவர்களை பற்றிய முழு தகவல்களும் வந்து விடும். அந்த அளவிற்கு சமூக வலைதளங்கில் தங்களை பற்றிய முழு விவரங்களையும் பலர் பதிவேற்றி வருகின்றனர். இதில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற முக்கிய தளங்களும் அடங்கும். இவற்றை சிலர் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வருவார்கள்.
ஆனால், பலர் இதிலே அதிக நேரத்தை செலவிடுவதும் உண்டு. அந்த வகையில் நமக்கு தேவையான செய்திகளை மிக எளிமையாக பதிவிட கூடிய ஒரு தளம் தான் டிவிட்டர். இதில் பல உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் முதல் நடிகர்கள் வரை கணக்கு வைத்திருப்பார்கள். எல்லா சமூக வலைத்தளங்களை போலவே இதிலும் அதிக நேரத்தை செலவிடுவதற்கு ஒரு கூட்டமே உள்ளது. இந்த டிவிட்டரில் கருத்து சார்ந்த சண்டைகளை அடிக்கடி ஏற்படுவது வழக்கம். கிட்டத்தட்ட ஃபேஸ்புக்கை போன்றே இதிலும் தேவையற்ற பதிவுகளை நாம் பார்க்க முடியும்.
அதே போன்று நமக்கு விருப்பம் இல்லாத பதிவுகளில் நம்மை பொதுவாக யாராவது டேக் செய்தால் கடுப்பாக இருக்கும். அதில் இருந்து நம்மை நீக்கி கொள்ளும் வசதி இதுவரை இல்லாதவாறு இருந்தது. இது பலருக்கும் எரிச்சல் தர கூடிய ஒன்றாக இருந்துள்ளது. ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நமக்கு பிடிக்காத டேக்கில் இருந்து நாம் தானாகவே விலகி கொள்ளும் வசதி உள்ளது, எனவே யாராவது தங்களின் பதிவுகளில் உங்களை டேக் செய்தால், அதில் இருந்து நீங்கள் உங்களை விலக்கி கொள்ளலாம்.
இந்த வசதியை தற்போது டிவிட்டரிலும் கொண்டு வர போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் பிறரின் டேக்கில் இருக்க விரும்பாத பயனர்களுக்கான வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி தற்போது சோதனை முறையில் செய்யப்பட்டு வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான மச்சுன் வோங் டிவிட்டர் பதிவில் இந்த அம்சம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த அம்சம் ட்விட்டர் உரையாடலில் இருந்து யூசர் பெயரை நீக்கி, அந்த உரையாடலில் மீண்டும் ஒருவரை டேக் செய்வதை தடுக்கிறது.
இதன் மூலம் அந்த டேக் உரையாடலில் இருந்து எந்த அறிவிப்புகளையும் பெறமாட்டீர்கள். ஆனால் அதை உங்களால் அணுகி பார்க்க முடியும். இந்த டிவிட்டர் பதிவில் இந்த புதிய அம்சம் என்ன செய்யும் என்பதைக் கோடிட்டுக் காட்டி உள்ளனர். அதைத் தேர்வுசெய்ய அல்லது நிராகரிப்பதற்கான விருப்பத்தையும் பாப்-அப் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் பின்டு டிரெக்ட் மெசேஜ் வசதியையும் தற்போது டிவிட்டர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.