பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிக பணக்காரராக இருந்த எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரை வாங்கியவுடன் எலான் மஸ்க் ஊழியர்களுக்கு எதாவது ஆஃபர்களை அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். முதல் கட்டமாக பல உயர் அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கிய எலான் மஸ்க், மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அவர்களாகவே வேலையை விட்டு வெளியேறினர்.
ஒருவரின் அதிகாரப்பூர்வ கணக்கை உறுதி செய்வதற்கு ப்ளூ டிக்கை வழங்குவதாக அறிவித்த ட்விட்டர் நிறுவனம் அதை 19.99 அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,647 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது.
ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதித்து அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இணையதளம், சமூக வலைத்தளம் போன்ற சக்திவாய்ந்த கருவிகள் தவறான காரியங்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது எனவும் இதில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய வாக்குரிமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக அப்போது ட்விட்டர் அரசியல் விளம்பரங்களுக்கு தடை அறிவித்தது. ஆனால் தனது அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டரில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய எலான் மஸ்க் இந்த தடையை தளர்த்தி உத்தரவிட்டார். இதனால், அதன் விளம்பரக் கொள்கையை டிவி மற்றும் பிற ஊடகங்களுடன் சீரமைப்பதாகவும் கருதினார்.
ஆனால் இவ்வளவும் செய்தும் கூட வருமானம் எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை. பல முயற்சிகளை எலான் மஸ்க் எடுத்து வந்தாலும், கடந்த ஓராண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 40% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்து 500 க்கும் மேற்பட்ட ட்விட்டரின் விளம்பரதாரர்கள் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் செலவழிப்பதை இடைநிறுத்தியுள்ளனர். ட்விட்டர் அதன் வருவாயில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் டிஜிட்டல் விளம்பரங்களை விற்பனை செய்வதன் மூலம் சம்பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ட்விட்டரை எலான் மஸ்க் தக்கவைத்து கொள்வாரா என்ற சந்தேகம் தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Advertisement, Elon Musk, Twitter