HOME»NEWS»TECHNOLOGY»twitter locked or suspended your account here are your options vin ghta
Twitter: ட்விட்டர் உங்கள் கணக்கை லாக் செய்தால் கவலை வேண்டாம்... இதை ட்ரை பண்ணுங்க போதும்!
உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கவும், உங்கள் கணக்கில் மொபைல் எண்ணைச் சேர்க்கவும் அல்லது அதன் விதிகளை மீறும் ட்வீட்களை நீக்கவும் ட்விட்டர் உங்களிடம் கேட்கும். உங்கள் கணக்கை மீட்டெடுக்க, உள்நுழைந்து, “உங்கள் கணக்கு அம்சங்களில் சிலவற்றை நாங்கள் தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளோம்” என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தியைத் தேடுங்கள்.
ட்விட்டர் கணக்குகளை நீங்கள் மிஸ் யூஸ் செய்தாலோ ட்விட்டர் நிபந்தனைகள் அல்லது சேவை விதிமுறைகளை மீறினாலோ உங்கள் ட்விட்டர் அக்கவுன்ட் தற்காலிகமாக லாக் செய்யப்படலாம் அல்லது சஸ்பென்ட் செய்யப்படலாம்.
ட்விட்டரில் உள்நுழைந்து, உங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளதா அல்லது சில அம்சங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டால், உங்கள் ட்விட்டர் கணக்கை மீண்டும் ஓபன் செய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய சில ஸ்டேப்களை இங்கே உங்களுக்காக நாங்கள் கொடுத்துள்ளோம். ட்விட்டரில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டால் அல்லது வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டிருந்தால் உங்கள் கணக்கை ட்விட்டர் லாக் செய்யும். மேலும் ட்விட்டர் விதிகள் அல்லது நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டர், கணக்குகளை லாக் செய்யும் அல்லது சஸ்பென்ட் செய்யும்.
உங்கள் கணக்கை மீண்டும் ஓபன் செய்ய...
ஸ்டெப் 1: முதலில் உங்கள் ட்விட்டர் கணக்கில் உள்நுழையவும்
ஸ்டெப் 2: உங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தியைத் தேடுங்கள்.
ஸ்டெப் 3: அங்கே 'தொடங்கு' என்பதை கிளிக் செய்யவும் / தட்டவும்
ஸ்டெப் 4: கணக்குடன் தொடர்புடைய உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
ஸ்டெப் 6: இறுதியில் சமர்ப்பிக்கவும். தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு ட்விட்டர் வழிமுறைகளை அனுப்பும்.
நீங்கள் ட்விட்டர் விதிகளை மீறியிருந்தால் உங்கள் ட்விட்டர் கணக்கை எவ்வாறு திரும்பப் பெறலாம்:
ட்விட்டர் அதன் நிபந்தனைகள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறும் போது கடுமையான கொள்கையை கடைபிடிக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் கணக்கின் சில அம்சங்களை நிறுவனம் கட்டுப்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் ட்விட்டர் கணக்கில் உலாவலாம், ஆனால் நீங்கள் பிற கணக்குகளுடன் ஈடுபட முடியாது. இன்னும் தெளிவாக கூறவேண்டுமென்றால் உங்களால் ரீ ட்வீட் செய்யவோ அல்லது லைக் செய்யவோ முடியாது. நீங்கள் நேரடி மெசேஜ்கள் வழியாக மட்டுமே ஈடுபட முடியும் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்கள் உங்களின் ட்வீட்களைக் காண முடியும் அவ்வளவு தான்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கவும், உங்கள் கணக்கில் மொபைல் எண்ணைச் சேர்க்கவும் அல்லது அதன் விதிகளை மீறும் ட்வீட்களை நீக்கவும் ட்விட்டர் உங்களிடம் கேட்கும். உங்கள் கணக்கை மீட்டெடுக்க, உள்நுழைந்து, “உங்கள் கணக்கு அம்சங்களில் சிலவற்றை நாங்கள் தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளோம்” என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தியைத் தேடுங்கள்.
மக்களை திசை திருப்பவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் போஸ்ட் இருந்ததால் அவரின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக சில வாரங்களுக்கு முன் ட்விட்டர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல சமிபத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
இன்று வேகமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில், மக்கள் பிறருடன் பேசும்போது குறிப்பாக சமூக ஊடகங்களில் முகம் தெரியாத நபர்களுடன் கண்ணியத்துடன் பேசுவது மிகவும் குறைவாகி வருகிறது. தங்களுக்கு பிடித்த நபர்களை புகழ்ந்தும் மற்றவர்களை இகழ்ந்தும் இகழ்ந்தும் பேசி வருவது சோசியல் மீடியாக்களில் பலரை முகம் சுழிக்க வைக்கின்றன. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சில சமூக ஊடகங்கள் இது போன்ற கடுமைகளை காட்டும். எனவே நீங்கள் இதற்கு முன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் இனிமேல் அவ்வாறு செய்யாமல் சோசியல் மீடியாக்களிலும் கண்ணியத்தை காக்க வேண்டும்.