DM மூலம் தேவையில்லாத தொல்லைகளா?- தீர்வுக்கான புதிய அப்டேட் கொண்டு வந்த ட்விட்டர்!

சமீபத்தில்தான் ட்விட்டரில் பதில் பதிவுகளை மறைக்கும் அம்சத்தை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்தது.

DM மூலம் தேவையில்லாத தொல்லைகளா?- தீர்வுக்கான புதிய அப்டேட் கொண்டு வந்த ட்விட்டர்!
ட்விட்டர்
  • News18
  • Last Updated: October 1, 2019, 5:22 PM IST
  • Share this:
ட்விட்டரை துஷ்பிரயோகம் செய்பவர்களை ஒதுக்க புது டூல் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ட்விட்டர் Direct Messages மூலம் பலருக்கு தேவையில்லாத மெசேஞ்கள் வருவது வழக்கம். அறிமுகம் இல்லாத கணக்கிலிருந்து வரும் மெசேஞ்களை தானியங்கியாகவே ட்விட்டர் வடிகட்ட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் நேற்று வெளியிட்டது. இந்த வடிகால் டூல் வசதியை விரைவில் அறிமுகம் செய்வதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேம் மெசேஜ், தவறான மெசேஜ் என அனைத்தும் இந்த ஃபில்டர் டூல் மூலம் வடிகட்டப்பட உள்ளது. பயனாளர் தேவை என்றால் மட்டுமே பார்க்க முடியும். மற்றபடி பயனாளர் விரும்பாத சூழலில் இதுபோன்ற வடிகட்டப்பட்ட மெசேஜ்கள் எதுவும் கண்ணிலேயே படாது என உறுதியளிக்கிறது ட்விட்டர்.


இந்த ஃபில்டர் டூல் iOS, ஆண்ட்ராய்டு, இணையதளம் என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாம். சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சமீபத்தில்தான் ட்விட்டரில் பதில் பதிவுகளை மறைக்கும் அம்சத்தை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்தது.

பயனாளர் தனக்கான அத்தனை ப்ரைவசியும் கிடைக்கும் வகையில் ட்விட்டர் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என ட்விட்டர் மேலாளர் மைக்கேல் யாஷ்மீன் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: செய்திக்காக புதியதொரு News Tab அம்சம்... அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக்...!108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்துவதை விசாரிக்க குழு!
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்