தீபாவளியைக் கொண்டாட புதியதொரு ஈமோஜியை அறிமுகம் செய்துள்ள ட்விட்டர்!

ட்விட்டரில் "Lights Out" மோட் பயன்படுத்தும் போது அது போனின் பேட்டரி ஆயுட்காலத்தையும் பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியைக் கொண்டாட புதியதொரு ஈமோஜியை அறிமுகம் செய்துள்ள ட்விட்டர்!
தீபாவளி ஈமோஜி
  • News18
  • Last Updated: October 25, 2019, 4:39 PM IST
  • Share this:
ட்விட்டர் இந்தியா, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் புதியதொரு ஈமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீபாவளி அகல்விளக்கு போன்றதொரு ஈமோஜி புதிதாக வெளியாகி உள்ளது. இதுகுறித்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஷ்வரி கூறுகையில், “ 'Lights On' என்னும் இந்த ஈமோஜியை இந்திய தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு வெளியிட்டுள்ளோம். தீப ஒளித் திருநாள் என்பதால் இந்த சிறப்பு வெளியீடு. விளக்கு ஒளிர்வது போன்றதொரு எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போல் இது இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் தளம் வழங்கும் டார்க் மோட் அம்சத்தை பயன்படுத்தி இந்த ‘தீபாவளி விளக்கு’ ஈமோஜியைப் பயன்படுத்தினால் மிகவும் அழகாக இருக்கும் என்றும் ட்விட்டர் யோசனை அளித்துள்ளது. ட்விட்டரில் "Lights Out" மோட் பயன்படுத்தும் போது அது போனின் பேட்டரி ஆயுட்காலத்தையும் பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு ஈமோஜி வருகிற அக்டோபர் 29-ம் தேதி வரையில் மட்டுமே ட்விட்டரில் பயன்பாட்டில் இருக்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்த 17 ஆப்ஸ் உங்கள் ஐபோனில் இருந்தால் டெலிட் செய்துவிடவும்..!

சாலை வசதியின்றி இன்னல்களை சந்திக்கும் தர்மபுரி மலைக்கிராம மக்கள்!
First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading