சமீபத்தில் ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் போலி கணக்குகளை நீக்கி வருவதாக தெரிவித்திருந்தது.
ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க முன்வந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அதில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கையை தனக்கு தெரிவிக்க வேண்டுமென ஒரு நிபந்தனையை முன்வைத்தார்.
போலி கணக்குகள் 5 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே, ட்விட்டரை வாங்குவேன் என்று தடாலடியாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் போலி கணக்குகளை நீக்கி வருவதாக தெரிவித்திருந்தது.
இதை கிண்டல் செய்யும் விதமாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். ட்விட்டர் யூசர் ஒருவர், ஒரு மில்லியன் போலி கணக்குகளை ட்விட்டர் நீக்குகிறது என்றால் ஒரு நாளைக்கு எத்தனை கணக்குகள் துவக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், இதுதான் உண்மையான கேள்வி என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக “spam bots”-களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று மஸ்க் வாதிட்டார். ஸ்பேம் கணக்குகள் ஒவ்வொரு காலாண்டிலும் அதன் செயலில் உள்ள யூசர்களின் எண்ணிக்கையில் 5%க்கும் குறைவாகவே உள்ளன என்று ட்விட்டர் கூறியது.
எத்தனை கணக்குகள் தீங்கிழைக்கும் ஸ்பேம் என்பதைக் கணக்கிட, IP முகவரிகள், ஃபோன் எண்கள், location மற்றும் கணக்கு செயலில் இருக்கும்போது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தீர்மானிக்க, பொது மற்றும் தனிப்பட்ட தரவு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி "ஆயிரக்கணக்கான கணக்குகளை" ஆய்வு செய்வதாக ட்விட்டர் கூறியது.
Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!
உண்மையான கணக்குகளை ஸ்பேம் என தவறாக அடையாளம் காண்பதைத் தவிர்க்க இதுபோன்ற தனிப்பட்ட தரவு உதவுகிறது என்றும் ட்விட்டர் கூறியது.போலி சமூக ஊடக கணக்குகள் பல ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ளது.
விளம்பரதாரர்கள் சமூக ஊடக தளங்கள் வழங்கும் யூசர்களின் எண்ணிக்கையை நம்பி, அவர்கள் பணத்தை எங்கு செலவிடுவார்கள் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஸ்பேம் போட்கள் செய்திகளைப் பெருக்கவும் தவறான தகவல்களைப் பரப்பவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் அனைத்து spam கணக்குகளும் தீங்கிழைக்கும் bots அல்ல என்று ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு, "நல்ல பாட்கள்" என்று நிறுவனம் அழைக்கும் தானியங்கு கணக்குகளுக்கான லேபிளுடன் வெளிவந்தது. உதாரணமாக, செய்திகள், உடல்நலம் அல்லது வானிலை அறிவிப்புகளை அனுப்பும் கணக்குகள் இதில் அடங்கும்.
Also Read : Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
போலி கணக்குகளின் சிக்கல் ட்விட்டர் மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு நன்கு தெரியும். நிறுவனம் தனது போட் மதிப்பீட்டை பல ஆண்டுகளாக யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு வெளிப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் அதன் மதிப்பீடு மிகவும் குறைவாக இருக்கலாம் என்று எச்சரித்தது.
கடந்த மாதம், ட்விட்டர் அதன் மூல தரவுகளின் “ஃபயர்ஹோஸ்” தரவுகளை மஸ்க்கிற்கு வழங்கியது. ட்விட்டர் நிறுவனமோ அல்லது மஸ்க்கோ இதை உறுதிப்படுத்தவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.