• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Twitter: 'இன்ஸ்டாவில் நேரடியாக டிவிட்டை போஸ்ட் செய்யலாம்' - ட்விட்டரில் புதிய வசதி!

Twitter: 'இன்ஸ்டாவில் நேரடியாக டிவிட்டை போஸ்ட் செய்யலாம்' - ட்விட்டரில் புதிய வசதி!

மாதிரி படம்

மாதிரி படம்

அதன்படி டிவிட்டரில் இருக்கும் மெசேஜை நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் சேர்க்க முடியும்.

  • Share this:
டிவிட்டர் மெசேஜை நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் அப்லோடு செய்யும் வசதியை டிவிட்டர் அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் டிவிட்டரில் வரும் புதிய வீடியோ மற்றும் மெசேஜ்களை அப்லோடு செய்வதில் யூசர்களுக்கு கடினமாக இருந்தது. விரும்பும் மெசேஜ் -ஐ ஸ்கீரின் ஷாட் எடுத்து மேனுவலாக ரீசைஸ் செய்து அப்லோடு செய்ய வேண்டும். இது யூசர்களுக்கு அசௌகரியமாக இருந்ததால், இந்த வசதியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். யூசர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டிவிட்டர் நிறுவனமும் டிவிட்டர் செயலியில் iOS வெர்சனில் புதிய மாற்றங்களை அதற்கேற்ப செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், புதிய மாற்றங்கள் தற்போது நடைமுறைக்கு வந்ததுள்ளது. அதன்படி டிவிட்டரில் இருக்கும் மெசேஜை நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் சேர்க்க முடியும். டிவிட்டரில் நீங்கள் பார்க்கும் ஒரு மெசேஜை இன்ஸ்டாகிராமில் பகிர விரும்புகிறீர்கள் என்றால், மெசேஜூக்கு கீழ் இருக்கும் ஷேர் பட்டனை அழுத்தவும். அப்போது, டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் உங்கள் செல்போனில் தோன்றும். உங்கள் விருப்பம்போல் டிவிட்டர் மெசேஜை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், நீங்கள் பகிரும் மெசேஜ் அல்லது புகைப்படத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தால், பகிர்வதற்கு முன்பே ரீசைஸ் செய்து கொள்ளும் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை செல்போனில் இருக்கும் செயலி மூலம் ரீசைஸ் செய்து பின்னர் இன்ஸ்டாகிராமில் அந்த மெசேஸ் ஸ்டோரீஸில் பகிரும், சுற்றி வளைத்து செய்யும் வேலைகள் இருக்காது. டிவிட்டரின் இந்த புதிய பியூச்சரை யூசர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என டிவிட்டர் கூறியுள்ளது. ஸ்மைலி, மியூசிக், ஸ்டிக்கர் ஆகியவற்றையும் நீங்கள் பகிரும் மெசேஜூடன் சேர்த்துக் கொள்ளலாம். எழுத்து வடிவில் இருக்கும் மெசேஜ்களுக்கு இந்த பியூச்சர் மிகவும் உபகயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Also read... iPhone: செப்டம்பரில் வெளியாகிறதா ஐபோன் 13 சீரிஸ் - விற்பனைக்கு வரும் தேதி குறித்து பரவும் தகவல்!

டிவிட்டரில் இருக்கும் செய்திகளை உடனடியாக இன்ஸ்டாகிராமில் பகிரும் வசதி மேம்படுத்தப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் செய்திகளை டிவிட்டரில் பகிரும் ஆப்சனையும் மேம்படுத்த வேண்டும் என யூசர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஸ்டோரீஸை அல்லது வீடியோவை பகிர்ந்தால் யூ.ஆர்.எல் மட்டுமே காண்பிப்பதாக தெரிவித்துள்ள யூசர்கள், இது டிவிட்டரில் இருக்கும் நபர்களுக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்த முடியாத நிலையாக இருப்பதாக வருத்தப்படுகின்றனர்.

ஸ்நாப் சாட் யூசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த ஆண்டும் ஐ.ஓ.எஸ் வெர்சனை டிவிட்டர் நிறுவனம் அப்டேட் செய்திருந்தது. இதனால், ஸ்நாப்சாட் யூசர்கள் டிவிட்டரில் இருக்கும் மெசேஜ்களை நேரடியாக பகிரும் வாய்ப்பு கிடைத்தது. அதனடிப்படையில் இன்ஸ்டாகிராமுக்கும் ஏற்ற வகையில் ஐ.ஓ.எஸ் - மறுவடிவமைப்பு செய்துள்ளது. யூசர் - பிரண்ட்லி என்ற கான்செப்டில் யூசர்களின் விருப்பங்களை அண்மைக் காலமாக டெக் உலகினர் உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றனர். இது போட்டி செயலிகளின் வருகையை தடுக்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: