ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்கள்.. புது சிக்கலில் மாட்டும் ட்விட்டர்!

கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்கள்.. புது சிக்கலில் மாட்டும் ட்விட்டர்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உலக பணக்காரரான எலான் மஸ்க், சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார்.

 • Trending Desk
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியூட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி, ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய முக்கிய யூசர்களை படிப்படியாக இழந்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு பிரபலங்களும், முக்கிய நட்சத்திரங்களும் ட்விட்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார்கள். ட்விட்டரின் வருமானத்திற்கு முக்கிய பங்காக இருக்கும் இவர்கள் இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ட்விட்டரிலிருந்து வெளியேறுவது அல்லது ட்விட்டர் பயன்படுத்தாமல் இருப்பது கண்டிப்பாக அந்நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தை குறைக்கும்.

  உலக பணக்காரரான எலான் மஸ்க், சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். ஆனால் நிறுவனத்திற்குள் ஏற்பட்ட சில குழப்பங்களாலும், சட்ட சிக்கல்களினாலும் ட்விட்டரை வாங்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கப் போகிறாரா இல்லையா என்பது பல மாதங்களாகவே இழுபறியாகவே இருந்து வந்துள்ளது.ஆனால் தற்போது ட்விட்டர் நிறுவனத்தை கிட்டத்தட்ட 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் சமீபத்தில் அதனை உணர்த்தும் விதமாக கை கழுவும் தொட்டியுடன் அலுவலகத்தில் நுழைவது போன்ற புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார் எலான் மஸ்க்.

  ஐபோன் ஓனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சார்ஜ் செய்வது ஈசிதான்.. விவரம் சொன்ன ஆப்பிள்!

  எலான் மாஸ்க் டிவிட்டரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில்தான் ட்விட்டர் சமூக வலைதளத்தின் பல முக்கிய யூசர்கள், அவ்வளவாக ஆக்டிவாக இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. “ஹெவி ட்வீட்டர்ஸ்” என அழைக்கப்படும் இவர்கள் தான் ட்விட்டரின் முக்கிய வருவாய் மையமாக உள்ளனர். மொத்தமுள்ள யூசர்களில் வெறும் பத்து சதவீதமே இவர்கள் இருந்தாலும், தினசரி இவர்கள் இடும் ட்வீட்டுகள் தான் 90% ட்விட்டர் சமூக வலைதளத்தையும், அந்நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட வருவாய்க்கும் காரணமாக உள்ளது. இவ்வாறு ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா காலகட்டத்தின் போது ட்விட்டர் பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

  ஹெவி ட்வீட்டர்கள் எனப்படும் இவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு, ஆறிலிருந்து ஏழு நாட்கள் வரை ட்விட்டரில் லாகின் செய்பவர்கள் ஆகவும், அதில் குறைந்தது மூன்றில் இருந்து நான்கு முறையாவது ட்வீட்டுகள் போடுபவராகவும் இருந்து வந்துள்ளனர். இவர்களையே ஹெவி ட்வீட்டர் என்று அழைப்பார்கள்.

  மேலும் ஆங்கிலத்தில் அதிக ட்வீட்டுகள் இடும் பல யூசர்கள் காணாமல் போய் விட்டார்கள். ட்விட்டருக்கு பதிலாக வேறு பல வலைத்தளங்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆங்கில ட்விட்டர் வாசிகள் மத்தியில் க்ரிப்டோ கரன்சியும் என் எஸ் எஃப் டபிள்யூ (NSFW) எனப்படும் “நாட் சேஃப் ஃபார் வொர்க் (Not safe for work)” என்று தலைப்பு தான் மிக முக்கிய தலைப்பாக மாறி உள்ளது.

  ட்விட்டர்

  அதே நேரத்தில் விளையாட்டுகள் மற்றும் கேளிக்கைகள் பற்றிய ஆர்வம் படிப்படியாக குறைந்து வந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இவ்வாறு ஆங்கில ட்விட்டர் யூசர்களிடமிருந்து எவ்வளவு வருவாய் அந்நிறுவனம் பெறுகிறது என்பதையும், ட்விட்டரின் மொத்த ட்வீட்டுகளின் ஆங்கில ட்வீட்டுகள் மட்டும் எவ்வளவு உள்ளது என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க ட்விட்டர் நிறுவனம் மறுத்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது மொழியை சார்ந்து மட்டும் ட்விட்டர் இருக்க விரும்பவில்லை எனவும் அதன் அனைத்து யூசர்களும் ட்விட்டருக்கு முக்கியம் என்பதால் இவ்வாறு தெரிவித்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.

  ஆனால் விளம்பரங்களின் மூலம் பெறப்படும் ட்விட்டரின் வருவாயானது மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் இருந்து தான் அதிகம் அந்நிறுவனத்திற்கு கிடைக்கிறது. முக்கியமாக இந்த வருடம் முழுவதும் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் உள்ள ட்விட்டர்வாசிகளால் தான் அந்நிறுவனத்திற்கு அதிகம் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் ட்விட்டர் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும் விளம்பரங்களில் பெரும்பாலானவை ஆங்கில மொழி பேசும் யூசர்களை குறிவைத்து காண்பிக்கப்படுவதாக இன்சைட் இன்டெலிஜென்சி அனலிஸ்ட் ஜாஸ்மின் என்பவர் கூறியுள்ளார்.

  ட்விட்டரில் அடிக்கடி தேவையற்ற ட்ரெண்டிங் டாப்பிக்குகள் அதிகமாக இருப்பதால், ட்விட்டரின் சொத்தான ஹெவி ட்வீட்டர்கள் வெறுப்படைந்து ட்விட்டரை பயன்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம் என்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனாலும் “இந்த” காரணத்தினால் தான் ஹெவி ட்வீட்டர்கள், ட்விட்டரை பயன்படுத்துவதை குறைத்துள்ளனர் என்று எதையும் உறுதியாக கூற முடிவதில்லை.

  எலான் மஸ்க்

  இதைபற்றி ட்விட்டர் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நாங்கள் வழக்கமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை பற்றியும், உலகில் என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பது பற்றியும் தெளிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது இன்னும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இரண்டாம் பாதியில் 238 மில்லியன் யூசர்களின் மூலம் ட்விட்டருக்கு வருமானம் கிடைக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

  நாட் சேஃப் ஃபார் வொர்க்:

  ட்விட்டரின் இந்த ஹெவி யூஸர்கள் “நாட் சேஃப் ஃபார் ஒர்க்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆபாசம் சம்பந்தப்பட்ட பதிவுகளை அதிகம் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கக்கூடிய ஆபாசமான பதிவுகளை அனுமதிக்க கூடிய வெகுசில சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்றாக உள்ளது. ட்விட்டரின் மொத்த பதிவுகளில் 13 சதவீதம் அந்த ஆபாச பதிவுகளால் நிறைந்துள்ளதாக தெரிகிறது.

  மாதிரிப்படம்

  இதனால் ட்விட்டருக்கு விளம்பரங்களை அளிக்கும் பல நிறுவனங்கள், இவ்வாறு ஆபாச பதிவுகளோடு சேர்த்து தங்கள் நிறுவனத்தின் விளம்பரமும் வந்தால் அது தங்கள் நிறுவனத்தின் பெயரை வெகுவாக பாதிக்கக்கூடும் என்று பயப்படுவதாக ரியூட்டர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ட்விட்டர் வலைதளத்தில் “சைல்டு போர்னோகிராபி” எனப்படும் குழந்தைகளை மையப்படுத்தி வரும் ஆபாச பதிவுகள் அதிகரித்து உள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட ட்விட்டர் நிறுவனம், “குழந்தைகளை உள்ளடக்கி வரும் ஆபாச பதிவுகளுக்கு ட்விட்டர் நிறுவனம் எப்பொழுதும் எதிராகவே இருந்துள்ளது. இதைப் பற்றி நாங்கள் மேலும் ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக அறிவித்துள்ள எலான் மஸ்க், அதன் பணியாளர்களின் பலரை வேலையை விட்டு நீக்கலாம் என்றும் பலர் பயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

  இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள ட்விட்டர் நிறுவனம் படிப்படியாக தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. முக்கியமாக ஆங்கிலம் பேசும் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தாக்குதலை குறித்து அதிகமாக ஆங்கில ட்விட்டர் வாசிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் பிறகு உலக செய்திகள், அரசியல் சம்பந்தப்பட்ட தலைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தன. மேலும் அந்த தலைப்புகளில் ஆர்வம் காட்டி பதிவிட்ட ட்விட்டர் வாசிகளும் அதிகமாக ட்விட்டரை பயன்படுத்துவதில்லை என்று அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

  இது போதாது என்று சினிமா பிரபலங்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் ஆர்வமாக இருந்தவர்களும், ஃபேஷன் துறையில் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் ஆர்வத்துடன் ட்வீட்டுகளை இட்டு வந்தவர்களும் படிப்படியாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ட்விட்டரில் தொழில் முறை போட்டியாளராக கருதப்படும் மெட்டா நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் ஆகியவற்றில் இணைந்து அங்கு ஆர்வமுடன் செயல்படுவதாக தெரிகிறது.

  மேலும் கொரோனா காலகட்டத்தில் அதிகரித்த இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் வீடியோ கேம்கள் சம்பந்தப்பட்ட ட்வீட்டுகளும், அந்த தலைப்பில் ஆர்வமாக இருந்த ட்விட்டர்வாசிகளும் பெரும் அளவு குறைந்துள்ளனர். இனி மிகப்பெரும் புரட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த இ-ஸ்போர்ட்ஸ் துறையில் ஆர்வம் குறைந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி எப்போது எப்படி இருக்கும் என நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது அதை ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டிருக்கிறது என ட்விட்டரின் இந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

  First published:

  Tags: Porn websites, Twitter