Home /News /technology /

Twitter-ல் அறிமுகமாகும் 'Co-Author' அம்சம்! எப்படி வேலை செய்யும்? என்ன பயன்?

Twitter-ல் அறிமுகமாகும் 'Co-Author' அம்சம்! எப்படி வேலை செய்யும்? என்ன பயன்?

Twitter

Twitter

Twitter | ஒரு ரிவர்ஸ் என்ஜினீயர், ட்விட்டரில் வரவிருக்கும் இந்த 'கோலாப்' அம்சத்தை கண்டறிந்து, இந்த அம்சம் எவ்வாறு செயல்பட முடியும் என்பது குறித்த ட்விட்டரின் அதிகாரப்பூர்வ டயலாக் பாக்ஸையும் பகிர்ந்து உள்ளார். இந்த அம்சம் இரண்டு யூசர்கள் ஒரு ட்வீட்டை கோ-ஆத்தர் (co-author) செய்ய அனுமதிக்கும்.

மேலும் படிக்கவும் ...
பிரபல மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர், ஒரு புதிய அம்சத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம், ஒரே நேரத்தில், ஒரே ட்வீட்டை இரண்டு வெவ்வேறு அக்கவுண்ட்களில் போஸ்ட் செய்ய அனுமதிக்கும் என்பது போல் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம், இதேபோன்ற ஒரு கோலாப் அம்சம் (collab feature) பிரபல போட்டோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அனுக கிடைக்கிறது, இதன் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு அக்கவுண்ட்களில் ஒரே போஸ்டை ஷேர் செய்ய முடியும்.

ஒரு ரிவர்ஸ் என்ஜினீயர், ட்விட்டரில் வரவிருக்கும் இந்த 'கோலாப்' அம்சத்தை கண்டறிந்து, இந்த அம்சம் எவ்வாறு செயல்பட முடியும் என்பது குறித்த ட்விட்டரின் அதிகாரப்பூர்வ டயலாக் பாக்ஸையும் பகிர்ந்து உள்ளார். இந்த அம்சம் இரண்டு யூசர்கள் ஒரு ட்வீட்டை கோ-ஆத்தர் (co-author) செய்ய அனுமதிக்கும். அதாவது இந்த அம்சம் கிரியேட்டர்களுக்கு பிராண்ட் பார்ட்னர்ஷிப்கள், இன்ஃப்ளூயன்ஸர் கேம்பைன்ஸ் (brand partnerships, influencer campaigns) அல்லது இரண்டு பேர் ஒரு போஸ்ட்டிற்கான கிரெட்டிஸ்களை ஷேர் செய்வதற்கான புதிய வழியை வழங்கும்.

அறியாதோர்களுக்கு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமும் இதேபோன்ற ஒரு அம்சத்தை அறிவித்தது, இது இரண்டு கிரியேட்டர்களை ஒரு போஸ்ட்டிற்கான கிரெடிட்டை ஷேர் செய்ய அனுமதிக்கிறது.

ரிவர்ஸ் இன்ஜினியர் அலெஸாண்ட்ரோ பலுஸி (Alessandro Paluzzi ) பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்கள், ட்விட்டர் ‘கோலாப்ரேஷன்ஸ்' எவ்வாறு செயல்படும் என்பதை சற்றே தெளிவாக காட்டுகிறது. உங்களை ஃபாலோ செய்யும் பப்ளிக் அக்கவுண்ட்களை மட்டுமே கோ-ஆத்தர் செய்ய நீங்கள் அழைக்க முடியும் என்றும், அந்த அக்கவுண்ட்களும் உங்கள் அழைப்பை ஏற்க வேண்டுமாம். அதாவது யாரும் யாரையும் ஒத்துழைக்க கட்டாயப்படுத்த முடியாது என்று அர்த்தம்.



இப்படியாக இருவர் இணைந்து எழுதிய ட்வீட்களில், இரண்டு யூசர்களின் ட்விட்டர் அக்கவுண்ட்கள் மற்றும் பெயர்களும் குறிப்பிட்ட ட்வீட்டின் மேலே அதன் கன்டென்ட்டிற்கு மேலே தோன்றும். மேலும் வெளியிடப்பட்டதும், இணைந்து எழுதிய ட்வீட்கள் இரு அக்கவுண்ட்ளிலிருந்தும் ஷேர் செய்யப்படும்.

Also Read : எலான் மஸ்க் - ட்விட்டர் பனிப்போர் : என்ன நடந்தது.!

டெக் க்ரன்ச் வெளியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, வரையறுக்கப்பட்ட ட்விட்டர் யூசர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என்பதை பற்றி பலுஸி எதையும் மேற்கோள் காட்டவில்லை என்று குறிப்பிடுகிறது. மேலும் ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் டெக் க்ரன்ச்சிற்கு கொடுத்த தகவலின் வழியாக, ட்விட்டர் நிறுவனம் இப்படி ஒரு புதிய அம்சத்தை "ஆராய்வது" உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார்,, ஆனால் குறிப்பிட்ட கோ-ஆத்தர் அம்சம் பற்றிய கூடுதல் தகவல்களை பகிர மறுத்துவிட்டார்.

Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ட்விட்டரில் கோலாப்ரேஷன் அம்சம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால் ட்விட்டரின் போட்டியாளர் ஏற்கனவே அத்தகைய அம்சத்தை வழங்குவதால், ட்விட்டரில் வரும் மாதங்களில் இந்த அம்சம் வெளியிடப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Twitter

அடுத்த செய்தி